திருச்சி, முக்கொம்பில்
பெண்ணுக்கு பாலியல் தொல்லை
3 பேர் கைது.
கோவை மாவட்டம் கே.கே. புதுôர், மணியன் மருதுகுட்டி வீதியை சேர்ந்தவர் விக்டர்ராஜ் மனைவி முத்துலட்சுமி(வயது 35). இவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் திருச்சி மாவட்டம் முக்கொம்பு சுற்றுலா மையத்துக்கு சென்றுள்ளார். முத்துலட்சுமி மற்றும் அவரது குடும்பத்து பெண்கள் சுற்றுலா மையத்தில் உள்ள கழிப்பறைக்கு சென்றுவிட்டு திரும்பும் போது, அங்கு வந்த எலமனுôர் அண்ணாநகரை சேர்ந்த ரா. சங்கிலி(என்கிற) தேவா (வயது19), க. முனீஸ்வரன் (வயது 19), கோ. வினீத் (வயது 19)ஆகிய மூவரும் சேர்ந்து அவர்களிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்துள்ளனர்.
இதை தட்டி கேட்ட முத்துலட்சுமியை அடித்து உதைத்து பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தியுள்ளனர். அக்கம் பக்கத்தினர் முத்துலட்சுமியை மீட்டு, தகறாறு செய்த இளைஞர்களையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து ஜீயபுரம் போலீசார் மகளிர் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து மூவரையும் கைது செய்தனர் .