திருச்சியில் மன உளைச்சலில் ஒருவர் தூக்கு மாட்டி தற்கொலை .
திருச்சி மேலப் பஞ்சபூர்காலனி தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 48) இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் அடிக்கடி மூச்சு திணறல் ஏற்பட்டு வந்தது.இதனால் மன உளைச்சலில் இருந்த குமார் சம்பவத்தன்று வீட்டின் அருகே உள்ள மின் கம்பத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து எடமலைப்பட்டிபுதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி சின்னா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.