24வது வார்டில் உயிர் பலி வாங்க காத்திருக்கும் மரண குழி.நடவடிக்கை எடுப்பார்களா கவுன்சிலரும், அதிகாரிகளும்.
திருச்சி மேற்கு தொகுதி 24வது வார்டு புத்தூர் சாலை பிள்ளையார் கோயில் தெருவில் சில மாதங்களுக்கு முன்பு தண்ணீர் குழாய் அடைப்பை சரி செய்ய தோண்டப்பட்ட குழி இதுநாள் வரை மூடப்படாமல் உள்ளது.
இதுகுறித்து 24வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் சோபியா விமலா ராணியிடம் பலமுறை கூறியும் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
தற்போது தினமும் மழை பெய்து வருவதால் இந்த பள்ளத்தில் மழைநீர் மற்றும் கழிவு நீர் கலந்து கொசுக்கள் உருவாகி இப்பகுதி பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயத்தில் உள்ளது.
மேலும் இங்கு சிறுவர்கள் அதிகம் விளையாடும் பகுதியாக உள்ளதால் யாராவது குழந்தைகள் இந்த பள்ளத்தில் விழ்ந்து விபத்து நடைபெறும் முன் மாநகராட்சி விரைந்து நடவடிக்கை எடுத்தால் நல்லது என இப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.