எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளை முன்னிட்டு கழக அமைப்பு செயலாளர் ரத்தினவேல் தலைமையில் தங்க தேர் இழுக்கப்பட்டது.
திருச்சியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளை முன்னிட்டு உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரத்னவேல் தலைமையில் எடப்பாடி பழனிச்சாமி நீண்ட ஆயுளுடன் மீண்டும் முதல்வராக வேண்டி சிறப்பு பூஜை செய்து தங்க தேர் இழுக்கப்பட்டது.

பின்னர் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் கருமண்டபம் பத்மநாதன்,பகுதி செயலாளர்கள் நாகநாதர் பாண்டி, கலைவாணன்,
முன்னாள் கோட்டத் தலைவர் ஞானசேகர்,வட்ட செயலாளர் ஜெரால்டு, மகேந்திரன் மற்றும் ஏராளமான நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.