Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சமயபுரம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வெயிலில் வாடி வதங்கும் பக்தர்களின் பரிதாப நிலை.

0

 

 

சமயபுரம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வெயிலில் வாடி வதங்கும் பக்தர்கள்.

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் நிதி மூலம் ரூ.13.80 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் வரிசை வளாகம்
காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் திறந்து வைத்துள்ள நிலையில், சமயபுரம் கோவிலில் பக்தர்களுக்கு தண்ணீர் வசதி கூட இல்லாமல் தவித்த நிலையில், அக்னி வெயிலில் வெந்து வாடும் நிலையில் உள்ளது.

சமயபுரம் கோவிலில் பொது தரிசனம் அல்லாது பக்தர்கள் நூறு ரூபாய் கட்டணம் செலுத்தி அம்மனை தரிசனம் செய்வதற்கு நீண்ட வரிசையில் மணிக்கணக்காக வெயிலில் நின்று தரிசனம் செய்ய வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது,

தற்காலிக நிழற்குடையாவது அமைத்திருக்கலாம் என்று பக்தர்கள் மனவருத்தத்துடன் சமயபுரம் மாரியம்மன் தரிசனம் செய்வதற்கு கேள்வி எழுப்பி செல்கின்றனர். சிலர் வெயிலில் வரிசையில் நிற்க முடியாமல் மயங்கி விழும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது,

சிலர் தரிசனம் செய்யாமல் திரும்பிச் செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது,

கோடை வெயிலில் வாடி வதங்கும் பக்தர்கள் மீது கருணை இல்லாமல் நடந்து கொள்கிறதா கோவில் நிர்வாகமும்.
அறநிலைத்துறையும் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்,

உடனடியாக கோவில் நிர்வாகமும்இந்து சமய அறநிலைத்துறையும் இதனை சரி செய்து உடனடி நடவடிக்கை எடுக்குமா என பக்தர்கள் மனம் வருந்தி செல்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.