Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அகில இந்திய அளவில் வேலை நிறுத்த போராட்டம் நடத்துவோம். எஸ் ஆர் எம் யூ துணை பொது செயலாளர் வீரசேகரன் பேட்டி.

0

 

அகில இந்திய அளவில் வேலை நிறுத்த போராட்டம்
நடத்துவோம்.
எஸ்ஆர்எம்யு துணைப் பொதுச் செயலாளர்
வீரசேகரன் பேட்டி

அகில இந்திய ரெயில்வே தொழிலாளர்கள் சம்மேளனத்தின்
நூறாவது ஆண்டு விழாவை முன்னிட்டு இன்று எஸ்ஆர்எம்யு மற்றும் அகில இந்திய ரெயில்வே தொழிலாளர் சம்மேளனம் ஆகியோர் இணைந்து நூறாவது ஆண்டு விழாவை திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலக வளாகத்திற்குள் கொண்டாடினார்கள்.
மேலும் 1974ம் ஆண்டு மே 8ந் தேதி அகில இந்திய ரெயில்வே தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் எஸ்ஆர்எம்யு சார்பில் நடத்தப்பட்ட 23 நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் பாதிக்கப்பட்டு உயிர் நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சியும் இன்று நடைபெற்றது.

இதையொட்டி எஸ் ஆர்எம்யு துணைப் பொது செயலாளரும், திருச்சி கோட்ட செயலாளருமான வீரசேகரன் கொடியேற்றி வைத்து தொழிலாளர்களிடையே பேசினார். முன்னதாக
இது குறித்து வீரசேகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 1974 ம் ஆண்டு மே 8ந்தேதி பொது வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து 23 நாட்கள் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தில் காவல்துறை ரெயில்வே பாதுகாப்பு படை, ராணுவம் ஆகிய மூவரும் இணைந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை தாக்கினார்கள். அதில் 6700 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். 12000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். 10 ஆயிரத்து 800 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.527 பேர் சிறை தண்டனை பெற்றனர். எனவே இந்த நாள் எங்களுக்கான வீரவணக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது.ஆனால் இன்றைக்கு தொழிலாளர் விரோத சட்டத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது.முன்பு போல் உடனடியாக வேலை நிறுத்தம் செய்ய முடியாது முறையாக 45 நாட்கள் முதல் நோட்டீஸ் அனுப்பி அதன் பிறகு 15 நாட்களுக்கு முன்பு மற்றொரு நோட்டீஸ் அனுப்பி அதன் பிறகு தான் வேலை நிறுத்த போராட்டம் நடத்த முடியும்.

எனவே
ரெயில்வே ஊழியர்களின் பல்வேறு பிரச்சனைகளை மனுக்களாக நாங்கள் தொடர்ந்து கொடுக்க உள்ளதாகவும் மீறினால் அன்று 1974 இல் நடைபெற்ற போராட்டத்தால் பிரதமர் இந்திரா காந்தி எப்படி பதவியை இழந்தாரோ அதேபோல மீண்டும் ரெயில்வே தொழிலாளர்களின் போராட்டத்தை நடத்திக் காட்டுவோம் என்று கூறினார்.இந்த நிகழ்ச்சியில் ஏராளமான
எஸ்ஆர் எம்யூ ரெயில்வே தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.