:
வாலிபரின் மூக்கை உடைத்த விராலிமலை எஸ்ஐ
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள சங்கம்பட்டியைச் சேர்ந்தவர் ராசு மகன் செல்வகுமார்
(வயது 26)
இவர் சொந்தமாக செங்கல் வியாபாரம் செய்து வருகிறார்.
நேற்று இரவு அவரது நண்பரை சந்திப்பதற்காக விராலிமலை எம்ஜிஆர் நகருக்கு சென்றுள்ளார்
அவரது நண்பருடன் பேசிக் கொண்டிருக்கும் போது அந்த வழியாக வந்த விராலிமலை காவல் உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ் மற்றும் தனிப்பிரிவு காவலர் சின்ராசு ஆகிய இருவரும் எதற்காக வெளியே நின்று கொண்டிருந்தீர்கள் என்று கேட்டு திட்டியதாகவும் அப்போது வாக்கு வாதத்தில் செல்வகுமாரை எஸ்.ஐ கோவிந்தராஜ் தாக்கியதாக கூறப்படுகிறது.
அதில் செல்வக்குமாருக்கு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியுள்ளது.
மூக்கில் ரத்தம் வலிய வலிய விராலிமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வரை மருத்துவமனைக்கு சென்ற எஸ்ஐ கோவிந்தராஜ் நீ இங்கு தங்கக்கூடாது தற்போது கிளம்பி என்றும் விரட்டியதாக கூறப்படுகிறது.
இதில் மன வேதனை அடைந்த செல்வகுமார் நிருபர்களிடம் நடந்தவற்றை கூறி அரசு இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்
இது குறித்து அவரது நண்பர் சுந்தரபாண்டி தகவல்; எந்த கோவில் திருவிழாவுக்கு சென்றாலும் அடாவடித்தனமாக காவல் உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ் செயல்படுகிறார். அனைவரையும் அடிக்கிறார் எனவும் கூறினார்.
இதேபோல் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இதேபோல் விராலிமலை காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளியான சங்கர் என்பவர் தாக்கப்பட்டு காவல் ஆய்வாளர் பத்மாவதி மற்றும் காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தி இன்று காலையில் இருந்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.