Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் தமிழ்நாடு தனியார் கல்வி நிறுவன ஆசிரியர் சங்கம் மற்றும் திருத்துறைப்பூண்டி அகரம் அகாடமி சார்பில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்.

0

'- Advertisement -

 

திருச்சியில் தமிழ்நாடு தனியார் கல்வி நிறுவன ஆசிரியர் சங்கம் மற்றும் திருத்துறைப்பூண்டி அகரம் அகடாமி இணைந்து நடத்தும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்.

Suresh

திருச்சி பிரஸ் கிளப்பில் தமிழ்நாடு தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்கள் சங்கத்தின்மாநில பொது செயலாளர் கிருபாகரன் மற்றும் மாநில துணைத் தலைவர் பாண்டியன் இனைந்து பத்திரிகையாளர்களை சந்தித்தபோது தங்கள் சங்கத்தின் சார்பிலும் திருத்துறைப்பூண்டி அகரம் அகாடமியும் இணைந்து திருச்சி வெஸ்ட்ரி மேல்நிலைப் பள்ளியில் வரும் ஞாயிற்றுக்கிழமை 14.5.2023 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தமிழகத்தின் முன்னணி கல்வி நிறுவனங்கள் பங்குபெறும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

 

முகாமில் சிபிஎஸ்சி, மெட்ரிக் பள்ளிகளுக்கான ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் வார்டன்கள் போன்ற பணிக்கான முன்னணி பள்ளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.இம்முகாமில் அனுபவசாலிகள் மற்றும் புதியவர்களும் கலந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.