திருச்சி விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்து கடத்திய
ரூ 1.28 கோடி தங்கம் சிக்கியது.
திருச்சி விமான நிலையத்தில் ஷார்ஜாவில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த 2 பயணிகளிடம் இருந்து ரூ.1 கோடியே 13 லட்சத்து 28 ஆயிரத்து 880 மதிப்புள்ள 1 கிலோ 840 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது பயணிகளிடம் அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி விமான நிலையத்திற்கு ஷார்ஜாவில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது அதில் பயணம் செய்த 2 ஆண் பயணிகளில் ஒருவர் தனது பேண்டில் மறைத்து வைத்து எடுத்து வந்த தங்க சங்கிலி மற்றும் உடலில் ஆசனவாயில் மறைத்து எடுத்து வந்த ரூ. 1 கோடியே 13 லட்சத்து 28 ஆயிரத்து 880 மதிப்புள்ள 1 கிலோ 840 கிராம் எடையுள்ள தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
பின்னர் சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.