தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் வகையில், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம், மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் உள்ள வையம்பட்டி தெற்கு ஒன்றியம், வையம்பட்டி வடக்கு ஒன்றியம், மணப்பாறை தெற்கு ஒன்றியம், மணப்பாறை நகர கழகம் ஆகியவற்றில் பூத் கமிட்டி அமைப்பதற்கான கையேடுகள், இளைஞர் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் கையேடு மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் கையேடுகளை
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் வையம்பட்டி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் சேது வையம்பட்டி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் பழனிச்சாமி, மணப்பாறை நகர கழக செயலாளர் பவுன் ராமமூர்த்தி ஆகியோர் கையேடுகளை பெற்றுக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.