
திருச்சி ஆயுதப்படை பெண் போலீஸ் தற்கொலைக்கு முயற்சி .
சேலம் மேட்டூர் குளத்தூர் கருங்கலூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார். இவரது மனைவி சங்கரி ஸ்ரீ (வயது 20). இவர் தற்போது திருச்சி கே.கே.நகர் பழனி நகர் மாநகர ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார்.
.திருச்சி மாநகர ஆயுதப்படை போலீசில் பணிபுரிந்து வரும் இவர் குடும்பப் பிரச்சனையின் கரணமாக விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.
இவரது கணவர் தனியார் செல்போன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 15-ஆம் தேதி குடும்ப பிரச்சினையால் விரக்தி அடைந்த சங்கரிஸ்ரீ கழிவறைக்கு வைத்திருந்த கிளீனரை எடுத்துக் குடித்தார் .இதில் மயங்கிய அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்திவேதவல்லி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
குடும்ப பிரச்சனையில் திருச்சி மாநகர ஆயுதப்படை பெண் காவலர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

