
திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே முதியவர் சுருண்டு விருந்து சாவு..
திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் பழமுதிர்ச்சோலை அருகே ஒரு 60 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கி விழுந்தார். உடனே அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அந்த முதியவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர் .
இது குறித்து கோ-அபிஷேகபுரம் கிராம நிர்வாக அதிகாரி ஸ்டீபன் தன்ராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் கண்டோன்மென்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிந்து விசாரனண நடத்தி வருகின்றார்.

