Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி இந்திய மருத்துவ மன்றம் சார்பில் உலக சுகாதார தின விழா.

0

'- Advertisement -

 

திருச்சியில் உள்ள இந்திய மருத்துவ மன்றம் சார்பில் உலக சுகாதார தின விழா கொண்டாடப்பட்டது.

திருச்சி தில்லைநகர் சாலை ரோட்டில் உள்ள இந்திய மருத்துவ மன்றத்தில் (ஐ.எம்.ஏ.) நேற்று உலக சுகாதார தின விழா கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு திருச்சி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மருத்துவர் லட்சுமி தலைமை வகித்தார். துணை இயக்குநர் மருத்துவர் சாவித்திரி முன்னிலை வகித்தார்

இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட மருத்துவ மன்றத்தின் தலைவர் டாக்டர் சித்ரா திருவள்ளுவன், செயலாளர் டாக்டர் முகேஷ் மோகன், டாக்டர் எம்.எஸ். அஷ்ரப்.

டாக்டர்கள் தமிழ்ச்செல்வி, குணசேகரன், கோமதி, சுரேந்திர பாபு, பிரபு இளங்கோ, அனிதா, கண்ணம்மை மனோகரன், மோகன்,கலைக்கோவன், கதிர்வேல், சாந்தி மற்றும் திரளான மருத்துவர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

விழாவில் பல மருத்துவமனைகளில் இருந்தும் செவிலியர்களும், செவிலிய பயிற்சி மாணவிகளும் திரளாக கலந்து கொண்டனர்.

விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கி சுகாதார தினத்தின்’ உரையாற்றி அதனைப் பேணிக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமை என்பதனை விழாவின் முக்கிய குறிக்கோளாக அறிவுறுத்தினார்கள்.

விழாவின் முக்கிய அம்சமாக செவிலிய மாணவிகள் கையில் தீபமேற்றி உலக சுகாதாரத்தை அனைவரும் போற்றிப் பாதுகாத்து உலகம் நல்ஒளி பெற வேண்டினர்.

விழாவில் முகேஷ் மோகன் நன்றி கூறினார்.

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.