
திருச்சி சுப்பிரமணியபுரம் புது பாண்டியன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயசேகரன் ரவி டேவிட் (வயது 72).
இந்த நிலையில் அந்தப் பகுதியில் நடந்து சென்ற அவர் திடீரென மயங்கி விழுந்தார் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு ஜெயசேகரன் ரவி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
வெயிலின் கொடுமை தாங்காமல் அவர் சுருண்டு விழுந்து இறந்து விட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அவரது மனைவி ஜெயசீலி எப் சி பானு கேகே நகர் போலீசில் புகார் செய்தார் அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

