“வனம் வளர்ப்போம் வளம் பெறுவோம்” விழிப்புணர்வு நிகழ்ச்சி .
திருச்சி மாவட்டம் ,முசிறி வட்டம், தா.பேட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த காருகுடி அரசு உயர்நிலைப்பள்ளியில் இன்று “உலக வன தினம்” கொண்டாடப்பட்டது.
அதிக அளவில் மரங்கள் வெட்டப்படுவதாலும் காடுகள் அழிவதாலும் பூமியும் அதனைச் சார்ந்து இருக்கக்கூடிய உயிரினங்களும் எதிர்கொள்ளும் சிக்கல்கள் பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. காடுகள் அழிவதால் பருவ நிலைகள் மாற்றமடைவதோடு அல்லாமல் இயற்கைப் பேரழிவுகள் ஏற்படுகின்றன. இயற்கையைச் சமன் செய்ய மரங்கள் வளர்ப்பது அவசியமாகிறது ஒவ்வொருவரும் பத்து மரக்கன்றுகளையாவது நட்டு அதனைப் பாதுகாத்து வளர்க்க வேண்டும்
என்று பள்ளியின் தலைமை ஆசிரியர் கீதா தன்னுடைய தலைமையுரையில்
எடுத்துரைத்தார் .
பள்ளியின் ஆசிரியர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.நிகழ்ச்சியின் நிறைவாக மாணவர்களுக்குப் பள்ளியின் சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. மாணவர்கள் மனதில் சமூக அக்கறையை ஏற்படுத்தும் விதமாக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியைப் பள்ளி மேலாண்மைக் குழுவினரும், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரும், ஊர் மக்களும் வெகுவாகப் பாராட்டினர்.