Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மறுநாள் குடிநீர் விநியோகம் ரத்து.

0

 

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட , ஸ்ரீரங்கம் மேலூர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் பொது தரைமட்ட கிணற்றிலிருந்து 55 நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது . இந்நிலையில் சார்க்கார் பளையம் அருகில் 900 எம்.எம் விட்டமுள்ள குழாயில் நீர் கசிவு ஏற்பட்டு சாலையில் வீணாக செல்கிறது . அதனை சரிசெய்ய 22.3.2023 நாளை பணி மேற்கொள்ளப்படவுள்ளது .

எனவே , மண்டலம் -2 விறகுப்பேட்டை புதியது . சங்கிலியாண்டபுரம் புதியது , சங்கிலியாண்டபுரம் பழையது , கல்லுக்குழி புதியது , கல்லுக்குழி பழையது , சுந்தராஜநகர் புதியது , சுந்தராஜபுரம் பழையது , காஜாமலை புதியது , மண்டலம் -3 அரியமங்கலம் கிராமம் , அரியமங்கலம் உக்கடை , தெற்குஉக்கடை , ஜெகநாதபுரம் புதியது , ஜெகநாதபுரம் பழையது , மலையப்பநகர் புதியது , மலையப்ப நகர் பழையது , ரயில்நகர் புதியது , ரயில்நகர் பழையது , மகாலெட்சுமி நகர் , முன்னாள் இராணுவத்தினர் காலணி புதியது , முன்னாள் இராணுவத்தினர் காலணி பழையது , M.K. கோட்டை செக்ஸன் ஆபிஸ் , M.K. கோட்டை நாகம்மை வீதி , M.K. கோட்டை நூலகம் , பொன்னேரிபுரம்புதியது , பொன்னேரிபுரம்பழையது , பொன்மலைப்பட்டி , ஐஸ்வர்யாநகர் , மண்டலம் -4 ஜே.கே. நகர் , செம்பட்டு , காமராஜ்நகர் , LIC புதியது , LIC சுப்பிரமணிய நகர் , தென்றல்நகர் புதியது , தென்றல்நகர் பழையது , தென்றல்நகர் E.B காலணி , வி.என் . நகர் புதியது , வி.என் . நகர் பழையது , சத்தியவாணி முத்து கே.கே நகர் , சுப்பிரமணிய நகர் புதியது , சுப்பிரமணிய நகர் பழையது , ஆனந்த நகர் , கே.சாத்தனூர் , பஞ்சப்பூர் , அம்மன் நகர் , கவிபாரதிநகர் , எடமலைப்பட்டிபுதூர் புதியது , காஜாமலை பழையது , கிராப்பட்டிபுதியது , கிராப்பட்டி பழையது , அன்புநகர் பழையது , அன்புநகர் புதியது , ரெங்காநகர் ஆகிய உயர் நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு 23.03.2023 அன்று குடிநீர் விநியோகம் நடைபெறாது .

மறுநாள் 24.03.2023 அன்று வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும் . எனவே பொது மக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தை பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும் குடிநீரைசிக்கனமாக பயன்படுத்துமாறும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் அவர்களால் கேட்டுக்கொள்ளப்படுகிறது .

 

 

Leave A Reply

Your email address will not be published.