Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமார் புகாரின் எதிரொலி.திமுகவின் கருப்பு சிகப்பு வண்ணம் மாற்றம்.

0

'- Advertisement -

கடந்த வாரம் திருச்சி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு புகார் கடிதம் அனுப்பி இருந்தார் அதில்,

திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி, மாநகராட்சி வார்டு எண் 48.ல், திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜின் தொகுதி மேம்பாட்டு நிதியின் (ரூ.15 லட்சம்) கீழ் பொன்மலை ஜி.கார்னர் – டிவிஎஸ் டோல்கேட் சர்வீஸ் சாலையில், ரஞ்சிதபுரம் பகுதியில் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்டுள்ள இந்த பயணியர் நிழற்குடையில், சட்டமன்ற உறுப்பினரின் பெயரானது அவர் சார்ந்து இருக்கும் திராவிட முன்னேற்ற கழகத்தின் கருப்பு, சிவப்பு வண்ணங்களில் எழுதப்பட்டுள்ளது.

 

இது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதி பயன்பாட்டு விதிமுறைகளுக்கும், அரசு அலுவலகங்கள் கட்டும் சட்ட விதிமுறைகளுக்கும் புறம்பானது, ஆகவே மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் இதனை கவனத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு சட்ட விதிமுறைகளை முறையாக பின்பற்ற அறிவுரைகளை வழங்கியும், சம்பந்தப்பட்ட பயணியர் நிழற்குடையில் உள்ள விதிமீறல்களை சரிசெய்து திருத்தி அமைத்திட வேண்டுமாறும் கேட்டுக்கொள்கிறேன் எனக் கூறியிருந்தார்.

மேலும் நேற்று முன் தினம் திருச்சி அண்ணா சிலை அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திலும் இதனை குறித்து பேசி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று அவசர அவசரமாக திமுக வண்ணத்தில் இருந்த எம் எல் ஏ இனிக்கோ இருதய ராஜின் பெயர் கலர் மாற்றப்பட்டது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.