திருச்சி மாவட்டத்தில் கைவிடப்பட்ட பச்சிளம் குழந்தைகள் மாவட்ட குழந்தைகள் நல குழுவினால் மீட்கப்பட்டு அரசு நிதியுடன் திருவானைக்காவல் மாம்பழச்சாலை அருகே உள்ள காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறனர்.
இங்கு கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி திடீரென 7 குழந்தைகளுக்கு ஒவ்வாமை காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இந்த குழந்தைகள் உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் 4 பெண் குழந்தைகள் மற்றும்2 ஆண் குழந்தைகள் பூரண குணமடைந்து காப்பகத்திற்கு சென்றனர். ஒரே ஒரு மூன்று மாத மஞ்சுளா என்ற பெண் குழந்தை மட்டும் தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல காப்பக அலுவலர் விசாரணை நடத்தி வருகிறார்.