“உயர் பதவி வகிக்க வாசிப்பு அவசியம்” பள்ளி மாணவர்களுக்கு காவல்துறை ஆய்வாளர் அறிவுரை.
காருகுடி அரசு உயர்நிலைப்பள்ளியில் தா.பேட்டை ஒன்றிய காவல்துறை ஆய்வாளர் பொன்ராஜ் நல்லொழுக்கத்துடன் கூடிய கல்வியின் அவசியம் குறித்து மாணவர்களிடம் உரையாற்றினார்.
“தூக்கத்தில் வருவதல்ல கனவு. உன்னைத் தூங்க விடாமல் செய்வது எதுவோ அதுவே கனவு” என்ற அப்துல் கலாம் அவர்களின் வரிகளை மேற்கோள்காட்டி மாணவர்கள் மிக உயர்ந்த பதவிக்கு வர வேண்டும் என்ற கனவை இளமை முதலே வளர்த்துக்கொண்டு அதற்கான கடின உழைப்பை முறைப்படி தர வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். துணை ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் காவலர்கள் செந்தில் ராஜா நவநீதன், கனகராஜ் ஆகியோர் தங்களது வாழ்த்துரையில் பெற்றோர்களின் கஷ்டத்தை நினைத்து பிள்ளைகள் படிக்க வேண்டும் என்றும் வீட்டுக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் தி.கீதா வரவேற்புரை நல்கினார். பள்ளியின் அறிவியல் ஆசிரியர் நன்றியுரை கூறினார். ஆசிரியர்கள் ஒத்துழைப்போடு மாணவர்களுக்காக இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.