காவிரி மேம்பாலம் 3ம் தேதியும் திறக்காவிட்டால் திருச்சி கலெக்டர் அலுவலகம் முற்றுகையிடபடும்.பாஜக மாவட்ட தலைவர் ராஜசேகரன்.

திருச்சி காவேரி மேம்பாலம் மூன்றாம் தேதியும் திறக்காவிட்டால் கலெக்டர் அலுவலகம் முற்றுகை,
திருச்சி பாஜக மாவட்ட தலைவர் ராஜசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த செப்டம்பர் மாதம் காவிரி பாலம் பராமரிப்பு பணியின் காரணமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டது. ஒரு மாத காலத்தில் பணிகள் முடிவடைந்து பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என அன்று அமைச்சர் கே.என். நேரு கூறினார்.
பின்னர் மழையின் காரணமாக பணிகள் முடிவடையவில்லை, ஒப்பந்ததாரர் சரியில்லை என பல காரணங்கள் கூறி ஒவ்வொரு மாதமாக தேதி தள்ளி அறிவிக்கப்பட்டது.
கடந்த ஆறு மாத காலமாக மக்கள் எண்ணில் அடங்காத துயரத்தில் உள்ளனர்.போக்குவரத்து நெரிசலில் சிக்கி தினமும் பல கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டிய சூழ்நிலையில் மனவேதனை உடன் திருச்சியில் இருந்து ஸ்ரீரங்கம் செல்வோரும் ஸ்ரீரங்கத்தில் இருந்து திருச்சி வருபவர்களும் வேதனை அடைந்து வருகின்றனர்.
கடந்த மாதம் எட்டாம் தேதி 15 நாளில் பால வேலைகள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கூறினார்.ஆனால் நாட்கள் சென்றது தான் மிச்சம்.
மக்களின் வேதனையை நெடுஞ்சாலை துறை கண்டுகொள்ளவே இல்லை.
பால வேலைகள் 90% முடிவடைந்த நிலையில் உள்ளூர் அமைச்சர்கள் இருவரும் ஈரோடு கிழக்கு தொகுதியில் தீவிர தேர்தல் பணியாற்றியதால் உள்ளூர் மக்களின் வேதனையை மறந்தனர்.
தற்போது திருச்சி திரும்பி உள்ள அமைச்சர் கே.என். நேரு இன்று வரும் 3ஆம் தேதி (03.03.2023) காவேரி மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் எனக் கூறியுள்ளார்.
கலெக்டரும்,அமைச்சர் கே.என்.நேருவும் மாற்றி மாற்றி தேதிகளை அறிவித்து வரும் நிலையில் மூன்றாம் தேதி அன்று மக்களின் வேதனைக்கு விடிவு காலம் பிறக்கும் என நினைக்கிறேன் அவ்வாறு நடைபெற விட்டால் பொதுமக்களின் நலனுக்காக போராடிவரும் திருச்சி பாரதிய ஜனதா சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முற்றுகை எனப்படும் என தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு திருச்சி மாநகர மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ராஜசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

