லால்குடி அருகே
பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை- செல்போன் திருட்டு.
திருச்சி லால்குடி அருகே உள்ள கல்லகம் மாரியம்மன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 42).
கூலி தொழிலாளியான இவர் வழக்கம் போல் வீட்டை பூட்டிக் கொண்டு மனைவியுடன் வேலைக்கு சென்றார். பின்னர் கணவன்- மனைவி இருவரும் வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த இரண்டு பவுன் செயின், ஒரு செல்போன் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக விஜயகுமார் டால்மியாபுரம் போலீசில் புகார் செய்தார். தகவல் அறிந்த போலீசார் கைரேகை நிபுணர்களுடன் சம்பவ இடம் விரைந்து வந்தனர். பின்னர் ரேகைகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2.
திருச்சி காட்டூரில் நள்ளிரவு
பேக்கரி ஜன்னல் கம்பியை உடைத்து திருட முயன்ற கொள்ளையன் கையும் களவுமாக சிக்கினார்
திருச்சி காட்டூர் கோகுல் நகர் 7-வது குறுக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 30) இவர் காட்டூர் சக்தி நகர் 2வது தெரு பகுதியில் பேக்கரி ஒன்றை நடத்தி வருகிறார். வழக்கம்போல் நேற்று இரவு பேக்கரியை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.
இந்த நிலையில் நள்ளிரவு 12 மணி அளவில் மர்ம ஆசாமி ஒருவர் அவரது பேக்கரியின் பின்பக்கம் ஏ.சி. பொருத்தப்பட்டிருந்த ஜன்னல் கம்பிகளை உடைத்து பேக்கரியில் திருடன் முயற்சித்து தான் கொள்ளையன்
கம்பிகளை உடைக்கும் சத்தம் கேட்டு தூங்கிக் கொண்டிருந்த அக்கம் பக்கத்தினர் திடுக்கிட்டு எழுந்தனர்.
பின்னர் அவனை சுற்றி வளைத்து பிடித்து பேக்கரி உரிமையாளர் விஜயகுமாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த விஜயகுமார் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் கொள்ளையனை போலீசில் ஒப்படைத்தார்.
விசாரணையில் பிடிபட்டவர் திருச்சி தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (வயது41) என்பது தெரியவந்தது.
அவரை போலீசார் கைது செய்தனர்.
இவர் மீது ஏற்கனவே துவாக்குடி, பொன்மலை ஆகிய காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது.