
திருச்சியில் ஓடும் பஸ்ஸில் பெண்ணிடம் ரூ.10,000 பணம் அபேஸ்.வாலிபர் கைது.
கரூர் கருப்பாயி கோயில் தெருவை சேர்ந்தவர் ரகுபதி. இவரது மனைவி செல்வி (வயது 52). இவர் திருச்சி திருவானைக்காவிலிருந்து அரசு டவுன் பஸ்ஸில் சிந்தாமணி அண்ணா சிலை பஸ் நிறுத்தத்தில் இறங்கினார்.
அப்போது பஸ்ஸில் வரும்போது பத்தாயிரத்து நானூறு பணம் திருடு போனது .இது குறித்த புகாரின் பெயரில் கோட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கோபால் வழக்கு புதிர்ந்து மதுரை மேலூரைச் சேர்ந்த அருண்குமார் என்ற வாலிபரை கைது செய்தனர். அவரிடம் இருந்து பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

