Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி:மாணவ மாணவிகளுக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்த பயிற்சி வகுப்புகள் வரும் 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

0

 

திருச்சி மாநகரக் காவல்துறை, திருச்சி மாவட்ட நிா்வாகம், இளையோா் எக்ஸ்னோரா ஆகியவை இணைந்து பள்ளி மாணவா், மாணவிகளுக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்த பயிற்சி வகுப்புகளை பிப்.13ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை நடத்தவுள்ளன.

திருச்சி மாவட்ட பழைய ஆட்சியரகம் அருகேயுள்ள குழந்தைகளுக்கான சாலைப் போக்குவரத்து விதிகள் பூங்காவில் இந்த பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.

நேற்று நடைபெற்ற பயிற்சி வகுப்பு தொடக்க விழாவில், ஆட்சியா் மா. பிரதீப்குமாா் பேசியது: கவனக்குறைவு காரணமாகவும், சாலைப் பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காத காரணத்தினாலேயே விபத்துகள் அதிகம் நடைபெறுகின்றன. தமிழகத்தில் விபத்துகள் அதிகம் நடைபெறும் முதல் 5 மாவட்டங்களின் பட்டியிலில் திருச்சி மாவட்டமும் இடம் பெற்றிருப்பது வருத்தம் அளிக்கிறது. சாலை விதிகளை கடைப்பிடித்தால் விபத்துகளை குறைக்கலாம். உயிரிழப்புகளை தவிா்க்க முடியும் என்றாா்.

திருச்சி மாநகரக் காவல்துறை ஆணையா் மு. சத்தியபிரியா பேசிய போது: போக்குவரத்து நெரிசல், வாகனப் பெருக்கம், விபத்துகள் அதிகரிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வரும் சூழலில் சாலைப் பாதுகாப்பில் ஒவ்வொருவரும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். திருச்சி மாநகரில் கடந்தாண்டு மட்டும் சாலை விபத்தில் 150 பேர் உயிரிழந்துள்ளனா். சாலைப் பாதுகாப்பு குறித்து கடந்தாண்டு 875 விழிப்புணா்வு முகாம்கள் நடத்தப்பட்டன. நிகழாண்டு 45 நாள்களுக்குள் 300-க்கும் மேற்பட்ட முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. சாலைப் பாதுகாப்பு என்பது நமது உயிரை பாதுகாப்பதுடன், பிறரது உயிரையும் பாதுகாக்கும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், போக்குவரத்துக் காவல் உதவி ஆணையா் ஜோசப் நிக்சன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ராகுல்காந்தி, குழந்தைகள் நலக்குழுத்தலைவா் பி. மோகன், பயிற்சி ஒருங்கிணைப்பாளா்கள் கே. விமல்ராஜ், திருக்கண்ணன் ஆகியோா் போக்குவரத்து விதிகள் குறித்து பள்ளி மாணவா்களுக்கு விளக்கம் அளித்தனா். முதல்நாள் பயிற்சி வகுப்பில் 400 மாணவ, மாணவிகள் 10 ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

Leave A Reply

Your email address will not be published.