திருச்சியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி.இந்திய வாய்,முகம், தாடை அறுவை சிகிச்சை சங்கம் மற்றும் ரத்னா குளோபல் மருத்துவமனை சர்பில் நடைபெற்றது.
அகில இந்திய அளவில் அதிக சாலை விபத்துகள் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. அதேநேரம் தலைக்கவசம் அணியாதது, செல்போன் பேசிக்கொண்டே இருசக்கர வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகளில் முகத்தில் ஏற்படும் எலும்பு முறிவுகளால் அதிக உயிரிழப்பு ஏற்படுகிறது.
இந்த விபத்துகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், சாலை பாதுகாப்பை அனைவரும் கடைப்பிடித்து உடலுக்கு அழகு சேர்க்கும் முகம் மற்றும் தாடை போன்றவற்றை பாதுகாக்க வேண்டும். மேலும் விபத்துல்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் இந்திய வாய் முகம் தாடை அறுவை சிகிச்சை சங்கம் மற்றும் ரத்னா குளோபல் மருத்துவமனை சார்பில் சாலை பாதுகாப்பு சைக்கிள் பேரணி நடைபெற்றது.
திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் இருந்து தொடங்கிய பேரணியை அரசு மருத்துவமனை முதல்வர் நேரு, இந்திய மருத்துவ சங்கத்தின் திருச்சி கிளை தலைவர் குணசேகரன், அப்பல்லோ மருத்துவமனை பிரிவு தலைவர் சாமுவேல் ரத்னா குளோபல் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் பிரவீன் தாஸ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இதில் பிரண்ட்லைன் மருத்துவமனை ஊழியர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மருத்துவர்கள் என 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்று புத்தூர், தென்னூர், தில்லை நகர், சாஸ்திரி ரோடு மற்றும் உழவர் சந்தை வழியாக சைக்கிளில் பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
முன்னதாக சாலையில் பாதுகாப்புடன் பயணிப்போம், போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவோம் என்பது குறித்து கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது.