திருச்சி காந்தி மார்க்கெட் அருகே பா.ஜ.க.
நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது.
2 பேருக்கு வலைவீச்சு.
திருச்சி தாராநல்லூர் அலங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் யஸ்வந்த் என்கிற வினோத் (வயது 27 )இவர் பாஜக காந்தி மார்க்கெட் மண்டல் செயலாளராக உள்ளார். நேற்று வழக்கம் போல் வீட்டில் குடும்பத்தினருடன் இருந்தபோது மூன்று வாலிபர்கள் அவரது வீட்டின் கதவை தட்டி உள்ளனர். உடனே வினோத் வெளியே வந்து கதவைத் தட்டிய அந்த வாலிபர்களை கண்டித்தார். அப்போது அந்த வாலிபர்கள் அவருக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. உடனே இது பற்றி வினோத் காந்தி மார்க்கெட் போலீசில் புகார் செய்தார்.தகவல் அறிந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சிற்றரசு சம்பவ இடம் விரைந்து வந்தார். பின்னர் குடிபோதையில் இருந்த
தாராநல்லூர் பூகொல்லை தெரு பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்கிற தீப்பொறி தினேஷ் (வயது 27)என்பவரை கைது செய்தனர்.
இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான அதே பகுதியைச் சேர்ந்த திவாகர் (வயது 25) மற்றும் அடையாளம் தெரியாத இன்னொரு வாலிபர் ஆகிய இருவரும் தப்பி ஓடிவிட்டனர். இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.