பழைய கார்களை புதியதாக மாற்றும்
தி செராமிக் ஸ்டுடியோ திறப்பு விழா.
திருச்சி -கரூர் பைபாஸ் சாலையில், குடமுருட்டி பாலம் அருகே ஸ்ரீ லட்சுமி மோட்டார்ஸின் ஒரு அங்கமான தி செராமிக் ஸ்டுடியோ திறப்பு விழா நடைபெற்றது.
தி செராமிக் ஸ்டுடியோவை ஸ்ரீ லெஷ்மி மோட்டார்ஸ் உரிமையாளர் தீனதயாளன் திறந்து வைத்தார். விழாவில் நிர்வாக இயக்குனர்கள் சங்கர், கேசவ் மற்றும் விஜயலட்சுமி, கிருத்திகா ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.
தி செராமிக் ஸ்டுடியோ குறித்து நிர்வாக இயக்குனர் சங்கர் கூறுகையில்: இங்கு கார்களுக்கு செராமிக் கோட்டிங், கிரா பெனின் கோட்டிங்,
பெயிண்ட் புரொடக்க்ஷன் பிலிம், அசஸ் சரீஸ் ஆகியவை
மிக குறைந்த விலையில் உயர் தரத்துடன் ஐந்து வருட உத்தரவாரத்துடன் வழங்குகிறோம். மேலும் திறப்பு விழா சலுகையாக வரும் 31ஆம் தேதி வரை 25 சதவீத தள்ளுபடி வழங்குகின்றோம்.
இந்த செராமிக் கோட்டிங் லேமினேஷன் போன்று காரை பாதுகாக்கும்.
வாகனத்திற்கு கூடுதல் பாதுகாப்பு, அழுக்கு மற்றும் சேற்றை விரட்டுகிறது. சுத்தம் செய்வது எளிது. மிகவும் குறைந்த செலவில்
பழைய கார்கள் பொலிவுடன் புதிய கார் போல் காட்சி தரும். இது பழைய கார்களை புதிய கார்களாக மாற்ற ஒரு அற்புதமான வாய்ப்பாகும் என்றார்.