திருச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்
பள்ளிக்கு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி.
திருச்சி, கோட்டை கீழரண்சாலை பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு எஸ்.ஆர்.வி பள்ளி சார்பில் 466 புத்தகங்கள் வழங்கப்பட்டது.
திருச்சி எஸ்.ஆர்.வி பள்ளிக் குழுமத்தின் புத்தக சுவர் திட்டத்தின்கீழ், இணை செயலர் சத்யமூர்த்தி தலைமையில் மாணவர்கள், மற்றும் ஆசிரியர்களிடம் இருந்து இலக்கியம், இலக்கணம், அறிவியல், வரலாறு என 466 புத்தகங்கள் சேகரிக்கப்பட்டன. அவற்றை எஸ்.ஆர்.வி நூலகம் வாயிலாக திருச்சி கோட்டை கீழரண் சாலையில் அமைந்துள்ள (விஸ்கோவுண்ட்ஸ் கோஷன்.முஸ்லிம்) அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு நூலகர் பவுல் தலைமையிலானோர் வழகினர்.
நூலகம் ஒரு பள்ளியின் மைய இயக்கமாகச் செயல்பட வேண்டும். வாசிப்பு இன்றியமையாத ஒன்றாக மாற்றப்பட வேண்டும் என்ற சிந்தனையில் நூல்கள் குறைவாக உள்ள அரசு பள்ளிகளின் நூலகங்களை மேம்படுத்தவும் இந்தச் செயல்பாடு முன்னெடுக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.