திருச்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் 5 இடங்களில் தேசிய கொடி ஏற்றி கொண்டாட்டம்.
நமது இந்திய திருநாட்டினுடைய 74 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பாக ஐந்து இடங்களில் தேசியக்கொடி ஏற்றி சிறப்பிக்கப்பட்டது.
திருச்சி அரியமங்கலம் 38 வது கிளையில் திருச்சி மாவட்ட செயலாளர் ஐனுல்லா மகுது தேசிய கொடியற்றி சிறப்புரையாற்றினார்கள்…
65 வது கிளை விமான நிலைய பகுதியில் திருச்சி மாவட்ட தலைவர் ஷேக் அப்துல்லாஹ் தேசிய கொடியை ஏற்றினார்கள்..
கட்சி தலைமை அலுவலகம் கல்லுக்குழியில் மாநில தலைவர் காஜா முஹையத்தீன் சாஹிப் தேசிய கொடியேற்றினார்கள்..
இறுதியாக ஆழ்வார்தோப்பு 29 வது கிளையில் அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் ஆன்மீக குரு ஹழ்ரத் அ சாதிக் பாட்சா பாவா சிஷ்தி தேசிய கொடியேற்றி சிறப்புரை ஆற்றினார்கள்..
தேசியக்கொடி ஏற்றி பின்னர் அவர் பேசிய போது: அனைத்து சமுதாய மக்களுக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்து, குடியரசு இந்தியா உருவான பிறகு அது குடி ஆட்சியா ( மக்களாட்சி ), முடி ஆட்சியா ( மன்னர் ஆட்சி ), அல்லது தடி ஆட்சியா ( சர்வாதிகார ஆட்சி ) என்ற எந்த வகையில் இருக்க வேண்டும் என்று கணக்கெடுப்பு நடத்தப்பட்ட போது அனைவரும் ஒருமித்த கருத்தாக குடி ஆட்சியான மக்களாட்சி தான் வேண்டும் என்று வாக்களித்தார்கள்…
அந்த வகையிலே, இரண்டு தினங்களுக்கு முன்பு இந்திய தேசிய ராணுவத்தின் நிறுவனர் கண்ணியத்திற்குரிய நேத்தாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களை கௌரவிக்கும் விதமாக அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள சுமார் 21 தீவுகளுக்கு ஒவ்வொரு பரம் வீர் சக்கரம் விருது பெற்ற வீரர்களுடைய பெயரை சூட்டி வந்தார் பிரதமர்…
அதில் ஒரு தீவுக்கு அப்துல் ஹமீது தீவு என்று பெயர் சூட்டியுள்ளார் பிரதமர் மோடி.. இந்திய சுதந்திர மற்றும் குடியரசு வரலாற்றில் இருந்து ஒரு சாரா மக்களை நீக்க வேண்டும் என்று சொல்லும் அரசு தற்போது இந்த செயல் அது சாத்தியமற்றது என்று சொல்லும் வகையில் அமைந்துள்ளது.. ஹிந்து, முஸ்லிம் கிறிஸ்தவர் என அனைவருடைய தியாகமே குடி ஆட்சியாகும்..
நம் அண்டை நாடான சிலோனில் சொந்த நாட்டு மக்களான சின்ஹலர்கள் அந்நாட்டு பிரதமர் கோத்தாபையா ராஜபக்ஷே மற்றும் அதிபர் மஹேந்திர ராஜபக்ஷே ஆகியோரை கடவுளாக பார்த்தனர்… அப்பாவி மக்கள் வஞ்சிக்கப்பட்ட. எந்தவித தயக்கமுமின்றி சொகுசாக வாழ்ந்தனர்..
காலங்கள் மாறின, அதே சிங்கள மக்கள் அதே ஆட்சியாளர்களை நாட்டைவிட்டே விரட்டியடித்தனர்… சர்வாதிகார ஆட்சி புரிய நினைத்தவர்களுக்கு கிடைத்த பாடம்..
இந்நிலை நாளை எங்கும் வரலாம் யாருக்கும் வரலாம், ஆகையால் சகோதரத்துவ எண்ணத்தோடு ஒற்றுமையாக வாழ ஆளும் அரசுகள் வழி செய்ய வேண்டும் இந்த மக்களாட்சி நாளில் என்று கூறி தன் உரையை நிறைவு செய்தார்.
இந்நிகழ்வில் தமிழ் மாநில செய்தி தொடர்பாளர் தீபக், திருச்சி மாநகர் மாவட்ட பொருளாளர் உசேன் ஷரீப், மாநகர் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராஜா முஹம்மது, கிழக்கு சட்டமன்ற தொகுதி செயலாளர் முஹம்மது ரபீக், 29 வது கிளை செயலாளர் முஹம்மது அப்பாஸ், 29 கிளை தலைவர் ஹக்கீம் மற்றும் வட்ட நிர்வாகிகள் என திரளாக கலந்து கொண்டனர்..