இனி தமிழகத்தில் திமுகவும் காங்கிரசை போல் இனி எந்திரிக்கவே முடியாது.
திருச்சி வீரவணக்கம் பொதுக்கூட்டத்தில் அமைப்பு செயலாளர் ரத்தினவேல் பேச்சு.
திருச்சி மாநகர், மாவட்ட மாணவரணி
அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் திருச்சி பாலக்கரை எடத்தெரு அண்ணா சிலை அருகில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாணவர் அணி மாவட்ட செயலாளரும், ஆவின் சேர்மான என்ஜினியர் கார்த்திகேயன் தலைமை தாங்கி பேசும் பொழுது
கடந்த2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பொதுமக்களிடம் பொய் வாக்குறுதிகளை எடுத்துக் கூறி திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்தது. அதன் பிறகு மக்களுக்கு எந்தவித நன்மையும் திமுக அரசு செய்யவில்லை.
எனவே பொதுமக்கள் வருகின்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்து அதிமுகவை வெற்றி பெற செய்வார்கள் என்று பேசினார்.
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]
கூட்டத்தில் நிர்வாகிகள் வெல்லமண்டி சண்முகம், சுரேஷ்குப்தா, அன்பழகன்,ஏர்போர்ட் விஜி, அன்பழகன்,எடத்தெரு பாபு, சையது ரபி, டைமண்ட் தாமோதரன்,சுந்தரவடிவேல், என்.டி. மலையப்பன் ஆகியோர் வரவேற்றனர்.
கூட்டத்தில் நிர்வாகிகள் கேசி பரமசிவம்,அதிமுக முன்னாள் அமைச்சர் நல்லுசாமி, நிர்வாகிகள் வெல்லமண்டி பெருமாள், ஏ.டி.பி. ராஜேந்திரன், பாலக்கரை சதர், சகாபுதீன்,கவுன்சிலர்கள் அரவிந்தன், கோ.கு.அம்பிகாபதி, மற்றும் ஆவின் குமார், வக்கீல் கலியமூர்த்தி,
தினகரன்,ஹரிகரன், வக்கீல் கலியமூர்த்தி,கார்த்தி, செல்வகுமார்,
ஆகியோர் முன்னிலை வகித்தனர்
கூட்டத்தில் எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில இணை செயலாளர், முன்னாள் துணை மேயர் சீனிவாசன் பேசும் பொழுது, திருச்சி மாநகராட்சியில் திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து பெரிய அளவில் திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. மாறாக எங்கு பார்த்தாலும் சாலைகளை தோண்டி போட்டு வைத்துள்ளனர்.அன்பழகன் தலைமையால் மாநகராட்சி ஊழல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் பொது மக்களுக்கு மின் கட்டணம் ,சொத்து வரியைஉயர்த்தி பாதிப்பை ஏற்படுத்தி உள்ளனர்.எனவே வருகின்ற ஈரோடு இடைத்தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமியின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் 40க்கு 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்று பேசினார்.
கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர்கள் துகிலி நல்லுசாமி, முஜிபுர் ரகுமான், ஆகியோர் பேசினார்கள்
கூட்டத்தில்மாநில அமைப்பு செயலாளர் முன்னாள் எம்பி ரத்தினவேல் பேசும் பொழுது, இந்தி திணிப்பை கொண்டு வந்தது திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ். 56 ஆண்டுகளுக்கு முன்பு விழுந்த காங்கிரஸ் அதன் பிறகு தமிழகத்தில் எழவே இல்லை.
தமிழ் மொழி வளர்ச்சிக்காக மறைந்த தமிழக முதல்வர்கள் எம் ஜி ஆர்,ஜெயலலிதா ஆகியோர் நல்ல பல திட்டங்களையும், சட்டங்களையும் கொண்டு வந்தனர்.
எம்ஜிஆர் ஆட்சியில் தான், மொழிப்போர் தியாகிகளுக்கு நிதி உதவி செய்யப்பட்டது.
தமிழுக்காக தொண்டாற்றினோம், தமிழ் தான் எங்களது வரலாறு என சொல்லக்கூடிய திமுக, திராவிட மாடல் என ஆங்கிலத்தில் உச்சரிப்பது ஏன் என நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நீதிமன்றம் ஒரு கொட்டு கொட்டி இருக்கிறது.
தமிழை வைத்து பிழைப்பு நடத்துகிறது திமுக ஆனால் தமிழுக்கு ஆற்றிய பணிகள் என்பது மிகவும் குறைவு.
எடப்பாடியாரின் ஆட்சி நாட்டு மக்களின் நலத்தை பயக்கக்கூடியதாக இருந்தது. இன்றைக்கும். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், நாட்டு மக்களுக்கு செய்யக்கூடிய களப்பணியில், அதிமுக என்றைக்கும் பின் தங்கிய இயக்கம் இல்லை என்பதை, எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு முதலமைச்சருக்கு தேவையான தெளிவு, உறுதி, தைரியமும் கொண்டவர் எடப்பாடியார்.
இத்தகைய ஆற்றல் மிகு தலைவர் மீண்டும் தமிழ்நாட்டு முதலமைச்சராக வரவேண்டும் என்று நாட்டு மக்கள் எண்ணத்தை கொண்டுள்ளனர்.
அதிமுக என்பது ஓர் போர்க்கள குதிரை, அந்தப் போர்க்கள குதிரை எந்த காலத்தில் வேண்டுமானாலும் திமுகவை தேர்தல் களத்தில் சந்திக்கும், அது ஈரோடு கிழக்கு தொகுதி என்றாலும் சரி, விரைவில் வரவுள்ள நாடாளுமன்ற தேர்தல் ஆனாலும் சரி, அனைத்திலும் அண்ணா திமுக வெற்றி வாகை சூடி, திமுகவை தமிழகத்திலிருந்து ஓட ஓட விரட்டி அடிக்கும்.
என்று பேசினார்
கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் ஏ.டி.பி.ராஜேந்திரன், இலியாஸ், சகாபுதீன், தென்னூர் அப்பாஸ், கலைவாணன், எம்.ஆர்.ஆர். முஸ்தபா, எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, ராஜ்மோகன்,கலீலுல் ரஹ்மான், என்ஜினியர் கார்த்தி, ராஜா, அப்பாகுட்டி, அன்னை நகர் சந்திரன், ஜெயக்குமார்,கேபி. ராமநாதன்,சக்திவேல் தர்கா காஜா, வக்கீல்கள் கங்கை செல்வன், சசிகுமார், தாமரைசெல்வன், சுரேஷ், ஜெயராமன், ராமலிங்கம், கல்லுக்குழி பாலசுப்பிரமணியன், சிந்தை ராமச்சந்திரன், குருமூர்த்தி, பாலுமகேந்திரன், டி.ஆர்.சுரேஷ்குமார், ஒத்தக்கடை மகேந்திரன், தலைமை கழக பேச்சாளர் ஆரி, சிந்தாமணி மகா, வண்ணார்பேட்டை ராஜன், ரோஜர், இப்ராஹிம்ஷா, சீனிவாசன், வசந்தம் செல்வமணி, எ.புதூர் வசந்தகுமார், வண்ணார்பேட்டை ராஜன், பொன்ராஜ், வரகனேரி சதீஷ், ராஜேந்திரன், ரவீந்திரன், முத்துகுமார், ராஜா,காசிபாளையம் சுரேஷ்குமார் ,ஆவின் குமார், நத்தர்ஷா, விநாயகமூர்த்தி, பொம்மாச்சி பாலமுத்து, கதிர்வேல்,
கமலஹாசன்,வெல்லமண்டி கன்னியப்பன், நாகராஜ், ஜானகிராமன்,
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் புத்தூர் சதிஷ்குமார் நன்றி கூறினார்.