Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி குடியரசு தின விழாவை முன்னிட்டு ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

0

'- Advertisement -

திருச்சியில், குடியரசு தினவிழாவையொட்டி:

விமான, ரயில், பேருந்து நிலையங்கள், மக்கள் கூடும்
இடங்களில் 1000 போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில்
திருச்சி,ஜன.24:
திருச்சியில் குடியரசு தினவிழாவையொட்டி விமான நிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், கோயில்கள் என பொதுமக்கள் கூடும் இடங்களில் மாநகர காவல்துறைச் சேர்ந்த 1000 பேர் செவ்வாய்க்கிழமை இரவு முதல் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், திருச்சி மாநகர பொது மக்கள் குடியரசு தின விழாவை சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் கொண்டாடும் வகையில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருச்சி மாநகர காவல் ஆணையர் ஆ.சத்தியப்பிரியா உத்தரவின் பேரில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு முதல் தீவிர ரோந்து மற்றும் பாதுகாப்பு பணிகள் நடைமுறைக்கு வந்துள்ளன. திருச்சி மாநகரில் சர்வதேச விமானநிலையம், ஒரு ரயில்வே சந்திப்பு மற்றும் 6 ரயில் நிலையங்கள், 2 பேருந்து நிலையங்கள், 10 முக்கிய கோயில்கள், தேவாலயங்கள், பள்ளி வாசல்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்கள் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. மாநகர் முழுவதும் மொத்தம் 24 இடங்கள் மற்றும் 9 சோதனை சாவடிகள் ஆகியவற்றில் வாகன தணிக்கைகள் செய்யவும், சந்தேக நபர்களை தணிக்கை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு பிரிவை சேர்ந்த நிபுணத்துவம் பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் 4 அணிகளாக, மோப்ப நாய் படை மற்றும் வெடிகுண்டு கண்டுபிடிப்பு சாதனங்களுடன் முக்கிய இடங்களை தீவிரமாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

வாகன தணிக்கையின் போது சந்தேகம்படும்படி நபர்கள் யாரேனும் கண்டறியப்பட்டால் அவர்களை விசாரணை செய்து உடனடியாக தக்க நடவடிக்கை மேற்கொள்ளவும், மாநகரில் உள்ள ஹோட்டல்கள்,தங்கும் விடுதிகள் போன்றவைகளில் வெளியாட்கள் யாரும் சந்தேகம்படும்படியாக தங்கியுள்ளார்களா என தீவிர சோதனை மேற்கொள்ளவும், குடியரசு தினத்தன்று சில்லறை மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறதா என கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் சார்பில் குடியரசு தின விழா கொண்டப்படும் இடமான திருச்சி மாவட்ட ஆயுதப்படை
வளாகத்தை சுற்றிலும் மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

 

திருச்சி மாநகர காவல் ஆணையர் ஆ.சத்தியப்பிரியா தலைமையில் துணை ஆணையர்கள் சுரேஷ், அன்பு, ஸ்ரீதேவி, 7 சரக காவல் உதவி ஆணையர்கள், 40 காவல் ஆய்வாளர்கள் மற்றும் 950 காவலர்கள் என திருச்சி மாநகரத்தில் சுமார் 1000 போலீஸார தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் செவ்வாய்க்கிழமை (நேற்று) முதல் ஈடுபட்டு வருகின்றனர்.

விமான, ரயில் நிலையங்களில் தீவிர சோதனை :
இவை தவிர திருச்சி சர்வதேச விமான நிலையத்தில், மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் மாநகர போலீருடன் இணைந்து தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். விமான நிலையத்துக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் நவீன சாதனங்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனைதகளுக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. அதேபோல பயணிகளின் உடமைகளும் தீவிர சோதனைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றன.

அதுபோல திருச்சி ஜங்ஷன் சந்திப்பு ரயில் நிலையத்திலும் ரயில்வே போலீஸôர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பயணிகளின் உடமைகள், மற்றும் வாகனங்கள் தீவிர சோதனைக்களுக்கு உள்ளாக்கப்படுகின்றன. ரயில்களும், ரயில் நிலையங்களும் தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. தவிர ரயில்வே பாலங்கள், மேம்பாலங்களிலும், ரயில்பாதைகளிலும் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. நிலையங்களின் வெளிப்பகுதியில் மாநகர திருச்சியில், குடியரசு தினவிழாவையொட்டி:

Suresh

விமான, ரயில், பேருந்து நிலையங்கள், மக்கள் கூடும்
இடங்களில் 1000 போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில்.

திருச்சியில் குடியரசு தினவிழாவையொட்டி விமான நிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், கோயில்கள் என பொதுமக்கள் கூடும் இடங்களில் மாநகர காவல்துறைச் சேர்ந்த 1000 பேர் நேற்று இரவு முதல் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், திருச்சி மாநகர பொது மக்கள் குடியரசு தின விழாவை சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் கொண்டாடும் வகையில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருச்சி மாநகர காவல் ஆணையர் ஆ.சத்தியப்பிரியா உத்தரவின் பேரில் நேற்று இரவு முதல் தீவிர ரோந்து மற்றும் பாதுகாப்பு பணிகள் நடைமுறைக்கு வந்துள்ளன.

திருச்சி மாநகரில் சர்வதேச விமானநிலையம், ரயில்வே சந்திப்பு மற்றும் 6 ரயில் நிலையங்கள், 2 பேருந்து நிலையங்கள், 10 முக்கிய கோயில்கள், தேவாலயங்கள், பள்ளி வாசல்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்கள் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

மாநகர் முழுவதும் மொத்தம் 24 இடங்கள் மற்றும் 9 சோதனை சாவடிகள் ஆகியவற்றில் வாகன தணிக்கைகள் செய்யவும், சந்தேக நபர்களை தணிக்கை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு பிரிவை சேர்ந்த நிபுணத்துவம் பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் 4 அணிகளாக, மோப்ப நாய் படை மற்றும் வெடிகுண்டு கண்டுபிடிப்பு சாதனங்களுடன் முக்கிய இடங்களை தீவிரமாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாகன தணிக்கையின் போது சந்தேகம்படும்படி நபர்கள் யாரேனும் கண்டறியப்பட்டால் அவர்களை விசாரணை செய்து உடனடியாக தக்க நடவடிக்கை மேற்கொள்ளவும், மாநகரில் உள்ள ஹோட்டல்கள்,தங்கும் விடுதிகள் போன்றவைகளில் வெளியாட்கள் யாரும் சந்தேகம்படும்படியாக தங்கியுள்ளார்களா என தீவிர சோதனை மேற்கொள்ளவும், குடியரசு தினத்தன்று சில்லறை மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறதா என கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் சார்பில் குடியரசு தின விழா கொண்டப்படும் இடமான திருச்சி மாவட்ட ஆயுதப்படை
வளாகத்தை சுற்றிலும் மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. திருச்சி மாநகர காவல் ஆணையர் ஆ.சத்தியப்பிரியா தலைமையில் துணை ஆணையர்கள் சுரேஷ், அன்பு, ஸ்ரீதேவி, 7 சரக காவல் உதவி ஆணையர்கள், 40 காவல் ஆய்வாளர்கள் மற்றும் 950 காவலர்கள் என திருச்சி மாநகரத்தில் சுமார் 1000 போலீஸார் தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் நேற்று இரவு முதல் ஈடுபட்டு வருகின்றனர்.

இவை தவிர திருச்சி சர்வதேச விமான நிலையத்தில், மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் மாநகர போலீஸôருடன் இணைந்து தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். விமான நிலையத்துக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் நவீன சாதனங்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனைதகளுக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. அதேபோல பயணிகளின் உடமைகளும் தீவிர சோதனைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றன.
அதுபோல திருச்சி ஜங்ஷன் சந்திப்பு ரயில் நிலையத்திலும் ரயில்வே போலீஸார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பயணிகளின் உடமைகள், மற்றும் வாகனங்கள் தீவிர சோதனைக்களுக்கு உள்ளாக்கப்படுகின்றன. ரயில்களும், ரயில் நிலையங்களும் தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. தவிர ரயில்வே பாலங்கள், மேம்பாலங்களிலும், ரயில்பாதைகளிலும் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. நிலையங்களின் வெளிப்பகுதியில் மாநகர போலீஸார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்..

 

 

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.