Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே தனியார் பஸ் மோதி ஒருவர் பலி.

0

'- Advertisement -

Ad banner

திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் தனியார் பஸ் மோதி மோட்டார் சைக்கிளில் வந்தவர் பலி.

TVK ad

திருச்சி காட்டூர் பாப்பா குறிச்சி பிலோமினாபுரத்தைச் சேர்ந்தவர் சண்முகம். (வயது 50). இவர் நேற்று இருசக்கர வாகனத்தில் திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் மேம்பாலம் அருகில் பெட்ரோல் பங்க் அருகே தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியாக வந்த தனியார் பஸ் இவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சண்முகத்தின் மனைவி கவிதா கொடுத்த புகாரின் அடிப்படையில் திருச்சி போக்குவரத்து புலனாய்வு பிரிவு தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அஜீம் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.