
பாலக்கரை
பகவதி அம்மன் கோவிலின் உண்டியலை உடைத்து பணம் திருட்டு .
திருச்சி பாலக்கரை கீழ கிருஷ்ணன் கோவில் தெருவில் பாலக்காட்டு பகவதி அம்மன் கோவில் உள்ளது.
சம்பவத்தன்று பக்தர்கள் தரிசனத்திற்கு பிறகு கோவில் பூட்டப்பட்டது.இந்த நிலையில் மர்ம ஆசாமிகள் யாரோ கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி கொண்டு அங்கிருந்து ஓடி விட்டனர். பிறகு கோவிலுக்கு வந்து மதுரைவீரன் என்ற பக்தர் பார்த்த பொழுது கோவில் பூட்டு, உண்டியல் உடைக்கப்பட்ட காணிக்கை பணம் திருடப்பட்டு இருப்பத்தை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக பாலக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து பாலக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். இந்த திருட்டு சம்பவம் குறித்து பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து உண்டியலை உடைத்து பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

