
கே.கே.நகரில் 2 வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு .
திருச்சி கே கே நகர் சுந்தர் நகர் பகுதியை சேர்ந்தவர் பாலமுரளி.இவரது மனைவி அஷ்ரப் பேகம் (வயது 40) சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டிவிட்டு அவருடைய தந்தை வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் மர்ம ஆசாமிகள் யாரோ வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். பிறகு அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த ஒன்றரை பவுன் ஜிமிக்கி மற்றும் 2000 ஆயிரம் பணத்தை திருடிக் கொண்டு ஓடி விட்டனர். பிறகு வீட்டிற்கு வந்து பார்த்த அஷ்ரப் பேகம் அதிர்ச்சி அடைந்து கேகே நகர் போலீசில் புகார் கொடுத்தார்.
இதேபோன்று திருச்சி கே கே நகர் சுந்தர் நகர் 2வது தெரு பகுதியை சேர்ந்தவர் ஜேம்ஸ். இவரது மகன் எடிசன் (வயது 36) சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டிவிட்டு வேளாங்கண்ணிக்கு குடும்பத்துடன் சென்று விட்டார்.இந்த நிலையில் மர்ம ஆசாமிகள் யாரோ வீட்டின் கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்று அறையில் இருந்த ஒன்னேகால் பவுன் நெக்லஸ் மற்றும் 1500 பணத்தை திருடி கொண்டு அங்கிருந்து ஓடி விட்டனர். பிறகு வீட்டிற்கு வந்த பார்த்த எடிசன் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த நகை, பணம் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் இந்த திருட்டு சம்பவம் குறித்து எடிசன் கே கே நகர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை திருடிய மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.

