Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தொண்டு நிறுவன நிர்வாகிகளை மிரட்டி பணம் பறித்த யூ டியூபர்ஸ் இரண்டு பேர் கைது

0

 

சமூக சேவகர்களை மிரட்டி
பணம் பறித்த இருவர் கைது.

தொண்டு நிறுவன நிர்வாகிகள் மற்றும் சமூக சேவகர்களை மிரட்டி பணம் பறிக்கும் யூ டியூபர் கும்பலைச் சேர்ந்த இருவர் திருச்சியில் கைது செய்யப்பட்டனர்.

சமூக வலைதளங்களில் பயன்பாட்டில் உள்ள யூடியூப் சேனலில், தமிழகத்தைச் சேர்ந்த ச சிலர் தாங்களை யூடியூப் சேனலைச் சேர்ந்தவர்கள் எனக் கூறிக்கொண்டு, பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினருக்கு புகார்கள் சென்றன. அவ்வாறு செயல்படுவோர், தங்களை யூடியூப் சேனலைச் சேர்ந்தவர்கள் எனக் கூறிக்கொண்டு, சமூக சேவகர்கள் மற்றும் தொண்டு நிறுவனத்தினரை குறிவைத்து தங்களது கைவரிசையை காட்டி வருகின்றனராம்.

குறிப்பாக, தொண்டு நிறுவனங்கள் நடத்துவோர் மற்றும் சமூக சேவர்கர்களை அடையாளம் கண்டு, தங்களது நட்பு வட்டத்துக்குள் கொண்டு வந்து, அவர்களுக்கு வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்து சமூக சேவை செய்ய அவ்வப்போது பண உதவிபெற்றுத் தருகின்றனராம்.

பின்னர் பெறப்பட்ட பணத்தை முறையாக சமூக சேவைகளுக்கு பயன்படுத்தாமல், தங்களுக்குள் பங்கிட்டுக்கொள்கின்றனராம். இதற்கு உடன்படாத சிலரை மறைமுகமாக கேமரா மற்றும் வீடியோ பதிவுகள் செய்து, மிரட்டி பணம் பறிக்கும் செயல்களிலும் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.
உடன்பட்டவர்களையும் விட்டு வைப்பதில்லையாம், அவர்களிடம் மேலும் பணம் கேட்டு மிரட்டி பணம் பறித்து வருகின்றராம்.
திருச்சியிலும் இதுபோன்ற மோசடிகளில் ஈடுபட்டதாக திருப்பூரைச் சேர்ந்த சூசைமேரி, புஷ்பராஜ் கோவையைச் சேர்ந்த செந்தில்குமார், ஜெனிபர் தனம் மற்றும் மதுரையைச் சேர்ந்த நிர்மலா ஆகியோர் மீது பாதிக்கப்பட்டவர்கள் திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி புகார் மனு அளித்தனர்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து தொடர்புடையவர்களை தேடி வந்தனர். இதனிடையே திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த புஷ்பராஜ் மற்றும் சூசைமேரி ஆகிய இருவரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.
அவர்கள் மீது தொடர்ந்து கொலை மிரட்டல், மிரட்டி பணம் பறித்தல், சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு மன உளைச்சலை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருவரும் திருச்சி மாவட்ட 2 ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், ஆஜர்படுத்தி பின்னர் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இவ்வாழ்க்கில் தொடர்புடைய மேலும் மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.