Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் பெர்ல் அறக்கட்டளையின் பி&டபிள்யு சட்ட அலுவலகத்தை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

0

 

பெர்ல் டிரஸ்ட், சட்ட அலுவலகத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்.

கடந்த 22 ஆண்டுகளாக கிராம மக்களை மேம்பாடு அடைய செய்ய பல்வேறு பணிகளை பெர்ல் டிரஸ் மேற்கொண்டு வருகிறது. திருச்சி மேலப்புதூர் கான்வென்ட் ரோடு புனித அன்னாள் காம்ப்ளக்ஸ் முதல் தளத்தில் பெர்ல் டிரஸ்ட் இயங்கி வருகிறது. கிராம மக்கள் விடுதலைக்கான கல்வி மற்றும் விழிப்புணர்வு அறக்கட்டளையானது புது பொலிவுடன் தொடங்கப்பட்டது.


திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி
பி&டபிள்யூ சட்ட அலுவலகத்தை திறந்து வைத்தார். இவ்விழாவிற்கு பெர்ல் அறக்கட்டளையின் இயக்குனர் மற்றும் மேலாண்மை அறங்காவலருமான வழக்கறிஞர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.

பெர்ல் அறக்கட்டளையின் துணை இயக்குனரும், ஊரக வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினருமான கவி செல்வா (எ)செல்வராணி வரவேற்பு உரையாற்றினார்.

மேலும் இவ்விழாவில் திருச்சி மாநகராட்சி மண்டல குழு தலைவர் தலைவர் மதிவாணன், திமுக கே.கே.நகர் பகுதி செயலாளர் மணிவேல், பாரதிதாசன் பல்கலைக்கழக சமூக நலத்துறை தலைவர் மங்களேஸ்வரன், திருச்சி மாவட்ட வழக்கறிஞர் சங்க தலைவர் சௌந்தர்ராஜன், திருச்சி மாவட்ட மூத்த வழக்கறிஞர்கள், சக வழக்கறிஞர்கள், இளம் வழக்கறிஞர்கள், பெண்கள் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரி தமிழ் துறை தலைவர் ஜெசிந்தா ராணி, பேராசிரியை டாக்டர் புனிதா, திருச்சி நலம் ஹெல்த் சென்டர் அக்குபஞ்சர் மருத்துவர் ஷீலாதேவி, பல்வேறு பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

பிரபல வழக்கறிஞரும், பெர்ல் அறக்கட்டளை இயக்குனருமான வழக்கறிஞர் டாக்டர் ராமச்சந்திரன் நடத்தி வரும் ஜேம்ஸ் அகடமிக் இன்ஸ்டிடியூட், ஜீசஸ் கம்ப்யூட்டர் இன்ஸ்டிடியூட், ஜோசப் டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட், மேரி டெய்லரிங் இன்ஸ்டிடியூட் ஆகிய பயிற்சி மையங்களையும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

மேலும் பள்ளி மாணவ மாணவியருக்கு இலவச நோட்டு புத்தகங்களை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கி மாணவர்களை நன்றாக படிக்க வேண்டும் என்று உற்சாகமூட்டினார்.

மேலும் சட்ட மையத்தின் வழக்கறிஞர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி காசு மற்றும் சீருடைகள் வழங்கினார்.பெர்ல் அறக்கட்டளையின் தன்னார்வ தொண்டர்களையும் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பாராட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.