Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

எம்ஜிஆரின் பிறந்த நாள்:திருச்சி அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி அறிக்கை.

0

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்சோதி அறிக்கை:-

தமிழக முன்னாள் முதலமைச்சர், கழக பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களுடைய அறிவுறுத்தலின்படி,

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் பாரத ரத்னா ப டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 106வது பிறந்தநாள் விழா (17.01.2023) செவ்வாய்க்கிழமை. பிறந்தநாள் விழாவை முன்னிட்டு.

டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவுகளை நெஞ்சில் சுமந்துள்ள மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு; மாநகராட்சி பகுதி, வட்ட அளவில், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் தங்கள் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள எம்ஜிஆர் அவர்களின் திருஉருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து; ஆங்காங்கே புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களுடைய திருவுருவப் படங்களை வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மு.பரஞ்சோதி தனது அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.