திருச்சியில் கஞ்சா விற்பனை:ரவுடி உள்ளிட்ட 2 பேர் கைது.

திருச்சி – திண்டுக்கல் சாலை ராம்ஜிநகர் பகுதியில் கஞ்சா விற்பதாக ராம்ஜிநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் காவல் ஆய்வாளர் வீரமணி தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், ராம்ஜிநகர் நியூ காட்டூர் பகுதியை சேர்ந்த ரவுடி மாயகிருஷ்ணன் (வயது37), மற்றும் அவரது நண்பர் சந்தோஷ் குமார்(வயது 30) ஆகிய இருவரும் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்த ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு இதே பகுதியில் சந்தேகத்துகிடமான வகையில் சுற்றித்திரிந்த ரவுடி மாயக்கிருஷ்ணனிடம் போலீஸார் எச்சரிக்கை விடுத்ததாகவும், அதையும் மீறி அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதையடுத்து கைது செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.