பொங்கல் பண்டிகை:
திருச்சியில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2200 க்கு விற்பனை.
முல்லை, ஜாதி பூ ரூ 1800.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் மல்லிகைப்பூ விலை ஒரேநாளில் இருமடங்கு விலை உயர்ந்து கிலோ ரூ.2, 200-க்கு விற்கப்படுகிறது.

பூக்களின் விலை உயர்வு.
பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் 15-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை என்றாலே கிராமங்களில் களைகட்டும். மார்க்கெட்டுகளில் கரும்பு, பூக்கள், பழங்கள், வெல்லம், பச்சரிசி உள்ளிட்ட பொருட்கள் அதிகஅளவில் விற்பனையாகும். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சிகாந்திமார்க்கெட் மற்றும் ஸ்ரீரங்கம் பூ மார்க்கெட்டுகளில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு கிலோ ரூ.800-க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லிகைப்பூ ஒரேநாளில் கிட்டதட்ட 3மடங்கு விலை உயர்ந்து ரூ.2, 200-க்கு விற்கப்படுகிறது. முல்லைப்பூ ரூ.1,800-க்கும், ஜாதிப்பூ ரூ.1,800-க்கும் விற்கப்படுகிறது.
மேலும் விலை அதிகரிக்கும்
இது குறித்து பூ வியாபாரி ஜங்ஷன் பூக்கடை பன்னீர்செல்வம் கூறுகையில்:
வழக்கமாக பொங்கல் பண்டிகைகளின்போது, கிராமங்களில் குடும்பம், குடும்பமாக குலதெய்வ கோவில்களுக்கு சென்று பொங்கல் வைத்து சாமி கும்பிடுவார்கள். இதனால் பூக்களின் தேவை அதிகமாக உள்ளது.தற்போது மல்லிகைப்பூ சீசன் இல்லை. அதனால் வரத்து குறைவாக தான் உள்ளது.
ஆனால் பொங்கல் பண்டிகை, மாட்டுப்பொங்கல் என தொடர்ச்சியாக விழாக்கள் வர இருப்பதால் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இனி வரும் நாட்களில் மல்லிகைப்பூ கிலோ மேலும் ரூ.2,500 வரை உயர வாய்ப்பு இருக்கிறது.
மேலும், வாசனை இல்லாத காக்ரட்டான் பூ கிலோ ரூ.1200-க்கு விற்கப்படுகிறது எனக் கூறினார்.