பாலக்கரை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் அடிக்கடி வழிபறி. தூரித நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.
திருச்சி பாலக்கரை காவல் நிலையத்திற்குட்பட்ட சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி இவரது மகன் ஜெயசூர்யா (வயது 22) .கார் ஆக்டிங் டிரைவர்.
சபரிமலை பயணம் சென்று நேற்று திருச்சி திரும்பிய இவர் இரவு
டி வி எஸ் டோல்கேட்டில் நண்பரை பார்த்து விட்டு இரவு 9.30 மணியளவில் தனது டி வி எஸ் எக்ஸ் எல் வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்பெல்ஸ் கிரவுண்ட் அருகே செல்லும்போது மறித்த அடையாளம் தெரியாத நபர்கள் 3 பேர் ஜெயசூர்யாவை கட்டையால் தலை ,உடல் பகுதிகளில் கடுமையாக தாக்கியும்,கீழே தள்ளியும் ஜெய சூர்யாவின் புது மொபைலையும் டி வி எஸ் எக்ஸ் எல் வாகனத்தினையும்,பர்ஸ் பணம் ,சட்டை பேண்ட் எல்லாத்தையும் பறித்துக்கொண்டு ஓடிவிட்டனர்.
தலை,முகம் கை,கால்களில் தாக்கப்பட்டதால் மயக்கமான ஜெயசூர்யா காலை மயக்கம் தெளிந்து எழுந்து பாலக்கரை காவல் நிலையம் சென்று புகார் அளித்துவிட்டு அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில்
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இரவு நேரங்களில் பாலக்கரை முதல் சங்கிலியாண்டபுரம் செல்லும் வழியில் காஜாப்பேட்டை பகுதியிலும்
இதேபோல் பெல்ஸ் கிரவுண்ட் ,
சங்கிலியாண்டபுரம் பகுதிகளிலும் அடிக்கடி வாகனங்களில் வருவோரை ஆயுதங்களை காட்டியும் , கடுமையாக தாக்கியும் உடமைகளை மர்ம நபர்கள் பறித்து செல்வது வாடிக்கையாகிவிட்டது.பணம்,பொருள், வாகனங்களை பறி கொடுத்தோர் பலர் காவல் நிலையங்களுக்கு அலைவதை நினைத்து புகார் கொடுக்காமலேயே போய் விடுகின்றனர்.
இதுமட்டுமின்றி செந்தணீர்புரத்தில் இருந்து அப்போலா ஆஸ்பஸ்திரி வழியாக செல்லும் சர்வீஸ் சாலை,எதிர்புறம் பகுதி பால் பண்ணை,
பிச்சைநகர் பகுதிகளிலும் இதுபோல் லாபரி தினமும் நடக்கின்றது .இது போன்ற பகுதிகளில் காவல்துறையினர் இரவு நேரங்களில் அடிக்கடி ரோந்து மேற்கொள்ள வேண்டும்.
இரவு நேரங்களில் இருட்டாக உள்ள பகுதிகளில் மின்விளக்கு எறிய,அல்லது புதிதாக அமைக்க உடனடியாக காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்தால்தான் பொதுமக்கள் பயமின்றி பயணிக்கமுடியும்