தமிழக கவர்னர் ரவி, சென்னையில் இருந்து விமானம் மூலம், நேற்று மாலை 5:00 மணிக்கு, திருச்சி விமான நிலையம் வந்தார். அங்கிருந்து கார் மூலம் தஞ்சாவூர் சென்று, தொழில் முனைவோருடனான கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்றார்.
திருவையாறில் இன்று நடைபெறும் தியாகராஜா ஆராதனை விழாவில் கலந்து கொள்கிறார்.
மாநகரில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கவர்னர் வருகை தரும் போது அந்த மாநகர மேயர் தான் முதலில் மரபு படி வரவேற்பு அளிக்க வேண்டும்.
ஆனால் இந்த மரபினை மீறி திமுகவைச் சேர்ந்த திருச்சி மாநகர மேயர் அன்பழகன் இந்த வரவேற்பு நிகழ்ச்சியை புறக்கணித்தார்.
திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று மாலை வந்த கவர்னரை, மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், மாநகராட்சி கமிஷனர் வைத்தியநாதன் போன்றோர் மட்டுமே வரவேற்றனர்.
தி.மு.க., தரப்பில் கவர்னர் மீது கடும் அதிருப்தியில் இருப்பதால், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் தஞ்சாவூர் தி.மு.க., மேயர் ராமநாதன் தரப்பில் கவர்னரை வரவேற்க செல்லவில்லை.