திருச்சியில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் அரிவாளால் கேக் வெட்டிய 11பேர் கைது.
போலீசார் அதிரடி நடவடிக்கை .
தமிழகத்தில் சென்னை போன்ற பெரு நகரங்களில் ரவுடிகள் தங்களின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது அரிவாள் கொண்டு கேக் வெட்டி பீதியை ஏற்படுத்துவார்கள்.
அது மட்டுமல்லாமல் சாலைகளில் பைக் ரேஸ் செல்லும் சமூக விரோத கும்பல் அறிவாலை சாலையில் உரசி தீப்பொறி பறக்க செய்து அச்சமூட்டி வருவதும் நடக்கிறது. இந்த மோசமான கலாச்சாரம் திருச்சி போன்ற நகரங்களுக்கும் பரவி இருக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 31 ம் தேதி நள்ளிரவு ஆங்கில புத்தாண்டு பிறந்தத்தை யொட்டி திருச்சி பாலக்கரை காஜாப்பேட்டை பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் அங்குள்ள தெருவில் அரிவாளால் கேக்கை வெட்டி கொண்டாடினர்.
மேலும் அந்த பகுதியில் சென்ற பொது மக்களை அரிவாளை காட்டி மிரட்டி கூச்சல் போட்டு உள்ளனர். இது அந்த பகுதி மக்களுக்கு அச்சமூட்டுவதாக இருந்தது. இந்த சம்பவம் குறித்து செங்குளம் காலனி கிராம நிர்வாக அலுவலர் பாலக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து திருச்சி பாலக்கரை காஜாப் பேட்டை கீழ கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த ஜான் சகாயராஜ் (வயது 19), செங்குளம் காலனியைசேர்ந்த அசோக் குமார் ( 20)மதுரை வீரன் கோவில் தெருவை சேர்ந்தஅசோக் ( 23) மணி பாரதி (18) புகழேந்தி (23) திலீபன் ராஜ் ( 22) சந்தோஷ் ( 19) சேதுபதி ( 23),16 வயது சிறுவன்,ஸ்டீபன் ( 25) சாருக் கான் (19) ஆகிய 11 பேரை போலீசார் கைது செய்தனர். பிறகு அனைவரையும் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர.