ஸ்ரீரங்கத்தில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை.
திருச்சி மங்கம்மா நகர், சங்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் பிரபு (வயது 37). திருமணமாகாத இந்த இளைஞர் கடந்த சில ஆண்டுகளாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவ நாளன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு பிரபு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அவரது அண்ணன் நடராஜன் ஸ்ரீரங்கம் போலீசில் புகார் செய்தார்.புகாரின் அடிப்படையில் சப்- இன்ஸ்பெக்டர் ராம்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

