Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஆலயத்தை இடிக்க ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு.ஒன்று திரண்ட கிறிஸ்தவர்கள்.கண்டு கொள்ளாத கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிக்கோ.

0

'- Advertisement -

திருச்சி கிழக்குத் தொகுதிக்கு உட்பட்ட 48வது வார்டில் (ஜி கார்னர் .ஒட்டி) மைதானம் அமைந்துள்ளது புனித செபஸ்தியார் கோயில் .

இக்கோயிலில் சுப்பிரமணியபுரத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ மக்களும் நம்பிக்கையுடன் புனித அந்தோனியாரை வணங்கி செல்வதுண்டு.

பல ஆண்டுகளாக உள்ள செபஸ்தியார் ஆலயத்தை ரயில்வேக்கு சொந்தமான ஜி.கார்னர் மைதானத்தில் ஆக்கிரமிப்பு கட்டுவதாக கூறி ரயில்வே துறையினர் ஆக்கிரமிப்பு என அகற்ற போவதாக கூறியுள்ளனர்.

இதனை அடுத்து இன்று ஜான் பிரிட்டோ சர்ச் பங்கு பங்குத்தந்தை தலைமையில் கிறிஸ்தவர்கள் புனித செபஸ்தியார் ஆலயம் அருகே ஒன்று திரண்டனர்.

தகவல் அறிந்த 48வது வார்டு கவுன்சிலர் கொட்டப்பட்டு தர்மராஜ் உடனடியாக இடத்துக்கு விரைந்து வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.ஆனால் ஆக்கிரமிப்பு அகற்றப்படுவதாக கூறிய ரயில்வே துறையினர் வரவில்லை.

கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவரும் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான இனிகோ இருதயராஜிடம் இது பற்றி கூறியது எதுவும் கண்டு கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்தவர்கள் தங்கள் ஆலயத்தை இடிக்க கூடாது என ஒன்று திரண்டு இருந்த போதும் கிறிஸ்தவர்களுக்காக இயக்கம் நடத்தும் கிழக்கு தொகுதி எம்எல்ஏ தங்கள் தொகுதி மக்களுக்காக ஏனென்று ஒரு குரல் கூட கொடுக்கவில்லை என்பதை அறிந்த இப்பகுதி கிறிஸ்தவர்கள் மிகவும் வருத்தத்துடன் ஜெபம் செய்து கலைந்து சென்றனர்.

 

சொந்தத் தொகுதி கிறிஸ்தவர்களுக்கே இவர் ஒன்றும் செய்யவில்லை.இவர் எப்படி தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களுக்கு நல்லது செய்வார் என தெரியவில்லை என்று புலம்பியவாறு சென்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.