Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஸ்ரீரங்கத்தில் பணம் வைத்து சூதாட்டம்.14 பேர் கைது.

0

'- Advertisement -

ஸ்ரீரங்கத்தில் பணம் வைத்து சூதாடிய
14 பேர் கைது.

ரூபாய் 60 ஆயிரம் பறிமுதல்.

திருச்சி ஸ்ரீரங்கம் அழகப்பா தெரு பகுதியில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாட்டம் நடத்துவதாக ஸ்ரீரங்கம் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் சம்பவ இடம் விரைந்து சென்று சூதாட்ட கும்பலை சுற்றி வளைத்து பிடித்தார். இதில் துறையூர் பேரமங்கலம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் ( 35 ), திருச்சி திருவானைக்காவல் பாரதி தெரு பகுதியைச் சேர்ந்த விஸ்வநாத் (30), திருவானைக்காவல் அழகப்பா தெரு பகுதியைச் சேர்ந்த கிஷோர் குமார் ( 32 ), மேல சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த உத்திரபதி (32) ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் வசம் இருந்து ரூபாய் 32 ஆயிரத்து 80 மற்றும் சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதே போன்று ஸ்ரீரங்கம் கும்பகோணத்தான் சாலை பகுதியில் பணம் வைத்து சூதாடிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வசம் இருந்து ரூ30 ஆயிரத்து 70 கைப்பற்றப்பட்டது.

மேலும் ஸ்ரீரங்கம் அழகிரி புரம் பகுதியில் பணம் வைத்து சூதாடிய ஐந்து பேர் பிடிபட்டனர் .
அவர்கள் வசம் இருந்து ரூ .210 மட்டும் கைப்பற்றப்பட்டது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.