Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அகில இந்திய வேளாளர் வெள்ளாளர் மகா சேனை மாநில நிர்வாக குழு கூட்டம்.

0

'- Advertisement -

அகில இந்திய வேளாளர் வெள்ளாளர் கூட்டமைப்பு மகா சேனை மாநில நிர்வாக குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆனந்த் ஹோட்டலில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு கூட்டமைப்பின் மாநில தலைவர் ஏ.ஆர்.ஏ. அண்ணாதுரை தலைமை வகித்தார்.

மாநில பொதுச் செயலாளர் அண்ணாதுரை, அமைப்புத் தலைவர் பழனிவேல், ஒருங்கிணைப்பாளர் கதிரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அவைத்தலைவர் நீலகண்டன் வரவேற்புரை ஆற்றினார்.

இந்தக் கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணைத்தலைவர் தென்காசி அய்யம்பெருமாள், கொங்கு நாடு இளைஞர் பேரவை கோபால் ரமேஷ், தமிழர் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் கந்தசாமி அதியமான், பாஜக சென்னை மாவட்ட ஓபிசி பிரிவு செயலாளர் குன்றத்தூர் சதீஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டமைப்பு மாநில தலைவர் ஏ.ஆர்.ஏ அண்ணாதுரை செய்தியாளர்களிடம் கூறுகையில், அகில இந்திய வேளாளர் வெள்ளாளர் கூட்டமைப்பு மகா சேனையின் மாநில மாநாடு திருச்சியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான முதல் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. விரைவில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அமைப்புகள், சங்கங்களை கூட்டி ஆலோசனை மேற்கொண்டு மாநாட்டு தேதி முடிவு செய்யப்படும்.

மாநாட்டில் பங்கேற்க அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள், தமிழக முதல்வர் ஸ்டாலின், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வெள்ளாளர் வேளாளர் கூட்டமைப்பில் உள்ள பிள்ளைமார், கவுண்டர், முதலியார், வெள்ளாஞ் செட்டியார் ஆகிய நான்கு பிரிவுகளை சேர்ந்தவர்கள் இதுவரை தனித்தனியாக மாநாடு நடத்தி உள்ளார்கள். முதல் முறையாக அனைவரையும் ஒன்றிணைத்து இந்த மாநாடு நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் தமிழகத்தில் இருந்து 10 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள். தமிழகத்தில் எங்களது 4 பிரிவுகளில் உள்ள 16 உட்பிரிவுகளையும் சேர்த்தால் தமிழகத்தில் மட்டும் 2.65 கோடி பேர் உள்ளனர்.

எங்களது சமூக பெருமை அங்கீகாரம் குறித்து பேசுபவர்களுக்கு மட்டுமே எங்களது ஆதரவு உண்டு. இது ஜாதி மாநாடு என்று எங்களை ஒதுக்கினால் நாங்கள் அவர்களை ஏற்க மாட்டோம். எங்களது சமூகத்தின் பெயரான வேளாளர் என்ற பெயரை அரசியல் உள்நோக்கத்துடன் பள்ளர் சமூகத்திற்கு தேவேந்திர குல வேளாளர் என்று அறிவித்து பெரும் தவறு நடைபெற்று விட்டது.

இதை மீட்டெடுக்கும் வகையில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. எங்களது சமூகத்தின் பெயரான வேளாளர் என்ற பெயரை தேவேந்திர குலத்திற்கு வழங்கியதை எங்களால் ஜீரணிக்க முடியவில்லை.

அதனால் இந்த மாநாடு பெயர் மீட்பு மாநாடாக நடைபெறும். 4 பிரிவுகளில் உள்ள எங்களது சமூகத்தினரை ஒன்றிணைக்கும் வகையில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. பூர்வகுடி வேளாளர்கள் ஒன்று சேர்ந்து நடைபெறும் முதல் மாநாடாக இது அமையும்.

வேளாளர் பிரிவில் உள்ள 13 பிரிவுகள் மற்றும் கொங்கு வேளாள கவுண்டர், தொண்டை மண்டல சைவ வேளாள முதலியார், வெள்ளாஞ் செட்டியார் ஆகியோரை ஒன்றிணைத்து திருச்சியில் நடைபெறும் மாநாடு திருப்புமுனை மாநாடாக அமையும்.

வேளாளர் சமூகத்தினர் அரசியல் ரீதியாக வஞ்சிக்கப்பட்டுள்ளோம். அரசியலிலும் பின்தங்கி இருக்கிறோம். இதை சரி செய்யும் வகையில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. ஜாதி ரீதியாக கணக்கெடுப்பு எடுத்து வேளாளர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

மேலும் தேசிய போராளியும், வழக்கறிஞருமான தியாகி வ.உ. சிதம்பரம் பிள்ளை பிறந்த தினமான செப்டம்பர் 5ஆம் தேதியை வழக்கறிஞர் தினமாக அறிவிக்க வேண்டும்.

கொரில்லா போர் முறையை கையாண்ட தீரன் சின்னமலை கவுண்டர் பெயரில் மாவீரர் தினம் உருவாக்க வேண்டும். அதேபோல் பெரிய புராணம் இயற்றிய சேக்கிழார் முதலியார் பெயரில் ஆன்மீக தினம் உருவாக்கப்பட வேண்டும் என்றார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.