இன்று சென்னையில் நடிகர் விஜய்
தந்தையும் புரட்சி இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகரை திருச்சி மாவட்ட முன்னாள் விஜய் ரசிகர் மன்ற தலைவரும், எஸ்.ஏ.சியின் செல்லப்பிள்ளையுமான ஆர்.கே. ராஜா புத்தாண்டை முன்னிட்டு நேரில் சென்று வாழ்த்து பெற்றார்.
பின்னர் திருச்சி மாவட்ட விஜய்யின் ரசிகர்களின் சார்பில் ஆர்.கே. ராஜா தலைமையில் 2023 ஆண்டுக்கான காலண்டரை ஆர்.கே.ராஜா வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மன்னார்குடி மும்பை பவுல், காஜாமலை சுப்பரமணி, தொட்டியம் பாரதிராஜா, மண்ணச்சநல்லூர் சுரேஷ், தாப்பேட்டை முத்தையா, தொட்டியம் ஹரிஹாரன், மன்னார்குடி சந்தோஷ்குட்டி, உய்யகொண்டான் திருமலை பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.