திருச்சிராப்பள்ளி தேசியக்கல்லூரியின் தமிழாய்வுத்துறையும்
கோயம்புத்தூர்
சர்வதேசத்தமிழ்
ஆய்விதழும் (UGC Care Listed Journal) இணைந்து
“தமிழ்ச் சமூகத்தில்
வழிபாட்டு மரபுகள்”
எனும் தலைப்பில்
அமைந்த பன்னாட்டுக் கருத்தரங்கம்
இன்று கல்லூரியின்
குளிர்மை அரங்கம் 2 ல்
நடைபெற்றது.
இக்கருத்தரங்கில்
நியூசிலாந்து நாட்டைச் சார்ந்த
பேராசிரியரும்,முத்தமிழ்ச் சங்க நிறுவனருமான
இலக்குவன் சொக்கலிங்கம் கலந்து கொண்டு கருத்தரங்க
ஆய்வுச்சுருக்கத் தொகுப்பு நூலை வெளியிட,அதன் முதல் பிரதியை
கல்லூரியின்
முதல்வர் முனைவர்
கி.குமார்
அவர்கள்
பெற்றுக் கொண்டார்.
அதன்பிறகு சிறப்புரையாற்றிய
நியூசிலாந்து பேராசிரியர்
தம் உரையில்
“தமிழக வழிபாட்டு முறைகளின் பெருமைகளையும்
காலந்தோரும்
வழிபாட்டு முறைகளில் நிகழ்ந்த மாற்றங்களையும்
எடுத்துக் கூறியதோடு
நியூசிலாந்தில் உள்ள வழிபாட்டு முறைகளையும்
சிறப்பாக
விளக்கிக் கூறினார்.”
இவ்விழாவில்
தமிழாய்வுத்துறையின் தலைவர்
முனைவர்
ச.ஈஸ்வரன் வரவேற்க,
சர்வதேசத்தமிழ் ஆய்விதழின்
ஆசிரியர்
முனைவர்
ப.சசிரேகா வாழ்த்துரை வழங்க
நிகழ்ச்சி அமைப்பாளரும்
தமிழாய்வுத்துறையின்
உதவிப்பேராசிரியருமான
முனைவர்
க.புவனேஸ்வரி
நன்றி கூறினார்.
பல்வேறு கல்லூரிகளில் இருந்தும் வருகை தந்த கட்டுரையாளர்கள்
அமர்வுகளில் பங்கேற்றுக்
கட்டுரை வாசித்தனர்.