எம்ஜிஆரின் 35வது நினைவு நாள்:எம்ஜிஆர் சிலைக்கு திருச்சி மாநகர அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை.கவுன்சிலர் அரவிந்தன் அஞ்சலி.
அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும்,
முன்னாள் தமிழக முதலமைச்சருமான
எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர்
டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு நாளையொட்டி
கண்டோன்மென்ட் நீதிமன்ற வளாகத்தின் அருகில் உள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில்
மாவட்ட கழக அவைத் தலைவர் மலைக்கோட்டை
அய்யப்பன் தலைமையில்
மலர் தூவி,மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர் சி.அரவிந்தன் சகாதேவபாண்டியன், எம்.ஆர்.ஆர்.முஸ்தபா மற்றும்
மாவட்ட கழக நிர்வாகிகள்,பகுதி கழக செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள்,
சார்பு அணி செயலாளர்கள்,
பகுதி கழக நிர்வாகிகள்,சார்பு அணி நிர்வாகிகள் வட்ட கழக செயலாளர்கள் மற்றும் வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் கழக செயல் வீரர்கள் செயல் வீராங்கனைகள் அனைவரும் பெருந்திரளாக இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.