திருச்சி சுப்ரமணியபுரத்தில் உள்ள ரதிமீனா குடோன் உயிர் பலிக்கு முன் அப்புறப்படுத்தப்படுமா ?
விபத்தை விளைவிக்கும் வகையில் திருச்சி சுப்ரமணியபுரம், ரஞ்சிதபுரம்பேருந்து நிறுத்தம் அருகில் ரதி மீனா பார்சல் சர்வீஸ் உள்ளது.
திருச்சி டி.வி.எஸ். டோல்கேட்டில் இருந்து ஜி.கார்னர் வரை செல்லும் ரோடு சர்வீஸ் ரோடாக இல்லாமல் ஆபத்தான இருவழி பாதையாக இருந்து வரும் டி.வி.எஸ்.டோல்கேட் ரோட்டில் தற்பொழுது சில மாதங்களாக ரதி மீனா பார்சல் சர்வீஸ் குடோன் இயங்கி வருகின்றது
டிவிஎஸ் டோல்கேட் அருகில் ஆறுமுகம் ஹோட்டல், ராயல் டீ கடை, மதன் டீ கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் சாலையிலேயே தங்களது இருசக்கர வாகனத்தை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.அதனை அவ்வபோது போக்குவரத்து காவலர்கள் சரி செய்து வருகின்றனர்.ஞாயிற்றுக்கிழமைகளில் நல் மீட்பர் சுவிசேஷ சபை வரும் நபர்களும் சாலையிலே தங்களது வாகனத்தை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
இது குறித்து சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த பொதுநல ஆர்வலர் மோகன் அவர்கள் கூறியதாவது:
இது போன்ற இந்த ரோட்டில் பல விபத்துக்கள், உயிர் இழப்புகள் என இருக்கும் இந்த ரோட்டில்
தற்போழுது இயங்கி வரும் ரதி மீனா பார்சல் சர்வீஸ் கன்டெய்னர் லாரிகள், வேன்கள் என எந்நேரமும் ஏற்றுவதும், இறக்குவதுமாக மெயின் ரோட்டை அடைத்து கொண்டு நிற்கின்றன.
இதனால் அதனை ஒட்டியுள்ள குறுக்கு ரோட்டில் இருந்து மேலே வரக்கூடிய வாகன ஓட்டிகளுக்கு மெயின் ரோட்டின் இரண்டு பக்கமும் வரும் வாகனங்களும் தெரியவில்லை இதனாலும் கண்டிப்பாக பெரிய வாகன விபத்துக்கள் ஏற்பட 200% வாய்புகள் உள்ளன
ரதிமீனாவின் பெரிய பெரிய கண்டெய்னர் வாகனங்களின் இடையூறால் அந்த வழியே வரும் வாகன ஓட்டிகளிடையே பெரும் பதட்டத்தையும் அந்த பகுதியில் வசிக்கும் பொது மக்களிடையே பயத்தையும் ஏற்படுத்தி வருகின்றன.
வேகமாக வரும் வாகனங்கள் சிறிது கவனம் சிதறினாலும் பெரும் விபத்து நடக்கும் நிலையில் உள்ளது.
அந்த வழியே ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு எந்நேரமும் பயத்தை ஏற்படுத்தி வரும் ரதி மீனா பார்சல் சர்வீஸ்சை பெரும் விபத்து நடக்கும் முன் வேறு இடத்திற்கு மாற்ற சம்மந்த பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
இது பற்றி ஏற்கனவே செய்தி தொலைக்காட்சியிலும் பேட்டியில் கூறியிருக்கேன் மேலும் இன்றும் ரோட்டை அடைத்துக் கொண்டு எப்படி நிறுத்தியிருக்கின்றார்கள் என்பதை எனது பத்திரிகை நண்பர்கள் மற்றும் போக்குவரத்து காவல் அதிகாரிகளுக்கும் தெரியபடுகிறேன் நடவடிக்கைகள் இருக்குமா அல்லது விபத்து ஏற்பட்ட பின் சம்மந்தபட்ட நிறுவனத்தை அகற்றுவார்களா என்பது கேள்விக்குறியே எனக் கூறினார்.
இந்த குடேன் முன் நிறுத்தும் வாகனங்களால் உயிர்பலி ஏற்படும் முன் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதியை கடந்து செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பு ஆகும்.