திருச்சி அருகே கல்லூரி ஊழியர் விட்டின் கதவை உடைத்து நான்கரை பவுன் நகை கொள்ளை
திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் பிச்சாண்டவர் கோயில் பகுதியை சேர்ந்தவர் இனிகோ, இவரது மனைவி டெய்சி ராணி ( வயது 42 ) இவர் திருச்சியில் உள்ள கல்லூரியில் பணிபுரிந்து வருகிறார்.
இவர் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார். இதற்கிடையில் அவரது கணவர் வெளியே சென்று விட்டு வீடு திரும்பிய பொழுது வீட்டின் முன் பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த பொழுது பீரோவில் இருந்த நான்கரைப் பவுன் நகை கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அவர் கொள்ளிடம் போலீசாரிடம் புகார் அளித்தார்.புகாரின் பேரில் கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.